கூடலூரில் தொடங்கியது மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிப்.17-ல் துவங்கியது.
பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் தென் மண்டலத்தின் தலைமை இயக்குநர் திரு M. வெங்கடேஸ்வர் தலைமையிலும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் & மத்திய மக்கள் தொடர்பகம் தமிழ்நாடு-புதுச்சேரி கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணாதுரை முன்னிலையிலும் தொடங்கிய இந்த மூன்று நாள் புகைப்படக் கண்காட்சியை கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு ஜெயசீலன், தமிழகத்தில் அறியப்படாத 1500 சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது என்றார்.
மேலும் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் தலைமை இயக்குநர் திரு.எம். அண்ணாதுரை, பள்ளி மாணவர்கள் அன்றாட பாடங்களை படிப்பதுடன் இருக்காமல் அறிவியல ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் கூடலூர் பகுதி மக்கள் வங்கிகள் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். மத்திய மக்கள் தொடர்பக மண்டல அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜெ. காமராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு சத்தியராஜா, மத்திய அரசின் தருமபுரி மண்டல மக்கள் தொடர்பாக கள விளம்பர அலுவலர் திரு பிபின் எஸ். நாத்,
உதவியாளர் திரு சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட விழாவில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 30 லட்ச ரூபாய் கடனுதவிகளை 6 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்