இந்திய கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
இது கப்பற்படையை வலுப்படுத்தும் என்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்
இந்தியக் கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் 2023, மார்ச் 30 அன்று கையெழுத்திட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இது கப்பற்படையை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும்.”
கருத்துகள்