5 நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்கள் நியமன உத்தரவுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் ஹங்கேரி உள்ளிட்ட 5 நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்கள் வழங்கிய நியமன உத்தரவுகளை அவர் பெற்றுக்கொண்டார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் திரு இஸ்ட்வன் ஸாபோ, மொரீஷியஸ் தூதரக அதிகாரி திரு ஹேமந்த்தாயல் திலூம், கிர்கிஸ்தான் தூதர் திரு அஸ்கர் பெஷிமோ, போர்ச்சுக்கல் தூதர் திரு ஜாவோ மானுவேல் மெண்டெஸ் ரிபைரோ டி அல்மிடா, மௌரிடானியா குடியரசின் தூதர் திரு முகமது அகமத் சலீம் முகமது ராரா ஆகியோர் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு-விடம் தங்களது நியமன உத்தரவுகளை சமர்ப்பித்தனர்.
கருத்துகள்