கண்டோன்மென்ட் வாரியங்களுக்கு தேர்தல்
கண்டோன்மென்ட் வாரியங்களில் காலியாகும் உறுப்பினர்கள் இடங்களை நிரப்புவதற்கு சாதாரண தேர்தல்கள் நடத்தப்படுகிறது. கண்டோன்மென்ட் தேர்தல் விதிகள் 2007-ன் படி கண்டோன்மென்ட் வாரிய தேர்தல்கள் நடைபெற்றது. இதன் விவரங்கள் டிஜிடிஇ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் செயின்ட் தாமஸ் மவுண்ட், வெலிங்டன் ஆகிய இரண்டு கண்டோன்மென்ட்கள் உள்ளன.
கண்டோன்மென்ட் சட்டம், 2006 இன் பிரிவு 28 இன் உட்பிரிவு (1) இன் படி, அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பின் மூலம் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் தேதியில் ஒவ்வொரு நபரும் பதினெட்டு வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். தகுதிபெறும் தேதிக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குக் குறையாமல் கண்டோன்மென்ட்டில் வசித்தவர், இல்லையெனில் தகுதி நீக்கம் செய்யப்படாவிட்டால், வாக்காளராகப் பதிவுசெய்ய உரிமை உண்டு. வாக்காளராகச் சேர்வதற்கான தகுதியின்மைகள் சட்டத்தின் பிரிவு 28ன் உட்பிரிவு (2) இல் பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய்பட், உறுப்பினர் திரு சந்தோஷ் குமாருக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
கருத்துகள்