அதிமுக சார்பில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வ ம் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும்,
மதுரை விமான நிலைத்தில் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தும், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்பணன் பழனிசாமி கட்சியை விட்டு விலகக் கோரி மருது அழகுராஜ் தலைமையில் நடைபெற்றதில் எதிர்ப்புத் தெரிவித்து ஓபன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர் இச் சூழ்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் வந்த விமானத்தில் பயணம் செய்த சிங்கம்புணரி வையாபுரிப்பட்டி இராஜேஸ்வரன் துரோகி எனக் கூறி நேரிலேயே அலற விட்ட சம்பவம் நடந்த நிலையில் , அது வைரலானது, அதனால் செய்வதறியாது பதறித் துடித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி முகத்தை பாத்தாலே.. சீறிய தலைவர்
சிவகங்கையில் இன்று ஒரே நாளில் எடப்பாடி கே.பழனிசயசாமியும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்பினருமே குவிந்தனர் அதனால் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்
ஒரே நாளில், ஒரே இடத்தில், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் குவிந்ததால், சிவகங்கையே பரபரப்பானது.
இரு தரப்பிலுமே இன்று ஒரே நாளில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதாக சொல்லி காவல்துறையிடம் அனுமதி கேட்டார்கள்.
ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை காரணமாகக் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து இரு தரப்பினருமே மதுரை உயர்நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தால் எந்த வித சட்டம்ஓழுங்குப் பிரச்சனையும் ஏற்படாதென்று மனுதாரர்கள் சிவகங்கை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் காலை 10.30. மணி முதல் 12.30 மணி வரை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தை நடத்தவும் காவல்துறை அனுமதியளித்தது. அதனால் இருபிரிவிலும், போஸ்டர்கள், பேனர்கள் வைத்தனர். மற்றொரு பக்கம், எடப்பாடி கே. பழனிசாமி வருகையைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.. இரு தலைவர்களும் ஒரே இடத்துக்கு வருவதால் காவல்துறையினர் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பேருந்தில் சென்ற போது, எடப்பாடியுடன் பயணித்த பயணி ஒருவர், தன்னுடைய செல்போன் மூலமாக திடீரென ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார்.. அந்த லைவ் நிகழ்ச்சியில் அவர் பேசவும் ஆரம்பித்து விட்டார், அதில், இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர் என்றார்.. இந்த நபர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே,
எடப்பாடி கே.பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த காவலர் அதைக் கவனித்துவிட்டு, செல்போனை பறித்தார் அதனால், அந்த பஸ்ஸுக்குள்ளேயே பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த நபரைக் கைது செய்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிந்தது.. மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் சமயத்தில் இந்த கசப்பு அதிகமாகிய நிலையில் சிவகங்கை.. துரோகி என அலறிய நபரால், பதறிய எடப்பாடி.. முகத்தை பாத்தாலே தெரிந்தது.
ஈரோடு தேர்தலில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையில், இந்த 3 பேருமே ஈரோட்டுக்கு செல்லவுமில்லை.. பாஜகவாவது அழைப்பு விடுக்குமென்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.. இதனால், இந்த தலைவர்களின், மொத்த ஆதரவாளர்களும், தொண்டர்களும் கொதிப்பில் உள்ளனர்.. அந்த ஆதங்கத்தைதான், இன்றைய தினம் ஒரே நாளில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா நடராஜன் ஆதரவுத் தொண்டர்கள் எடப்பாடி கே.பழனிசாமி மீதான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மதுரை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ் தெரிவித்ததில், 'எடப்பாடி பழனிசாமி முகத்தைப் பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்.. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.. அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராகவே இருக்கிறார்கள்..
அவருக்கு மக்கள் மத்தியிலுள்ள எதிர்ப்பின் வெளிப்பாடு தான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது.. அதிமுகவை சாதிக் கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும்' என்றார்.. இந்த முறை இடைத்தேர்தல் விவகாரத்தில் தங்களை பாராமுகமாக நடத்திய பாரதிய ஜனதா கட்சி மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிருப்தியிலுள்ளது.. அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் இயற்றவும் சென்றது. தங்களை பாஜக கழட்டிவிட்டதே என்ற கோபத்தில் தான், நாங்கள் மக்களிடம் செல்லப் போகிறோம், மக்களைச் சந்திக்க போகிறோம் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படியே இன்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.. ஒருபக்கம் பாஜக மறுபக்கம் எடப்பாடி கே.பழனிசாமி என இரு தரப்புமே தங்களின் சுய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்வெளிப்பாடுதான், இன்றைய மதுரை விமான நிலையம் மற்றும் சிவகங்கையில் நடந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.
எடப்பாடி கே. பழனிச்சாமிக்கெதிராக மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சி சார்ந்த வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு சிவகங்கை மாவட்ட அணிச் செயலாளரான ராஜேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மீது அமமுக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதில் தனது 1,50,000 ரூபாய் மதிப்புள்ள செல் போனைப் பறித்துக்கொண்டதற்காகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காகவும், காயம் ஏற்படும் வகையில் மதுரை விமானநிலையத்தில் தன்னை தாக்கியதாகவும் ,
எடப்பாடி கே. பழனிச்சாமி அவரது PSO கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் உள்ளிட்டோர் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதன் நகல் செய்தியின் பார்வைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது,
கருத்துகள்