குறவன் -குறத்தி ஆட்டம் எனும் நடன நிகழ்ச்சி நடத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி
மதுரை மாவட்டம் விளாங்குடி முத்துமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நீதிமன்றம் ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது அதை அடிப்படையாக வைத்து .கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுற்றுலா, கலாச்சாரம் பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ளதாவது தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட 100 கலைகள் அடங்கிய கலைப்பட்டியலில், குறவன்- குறத்தி ஆட்டம் இடம் பெற்றிருந்தாலும், இக்கலைப்பிரிவில் உறுப்பினராக இதுவரை எவரும் பதிவு செய்து சேரவில்லை என்பதால், வரிசை எண்.40-ல் இடம் பெற்றுள்ள குறவன்- குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்ய வேண்டுமென கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கரகாட்டம் உட்பட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும், குறவன்- குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்குத் தடை விதித்து ஆணை வழங்குமாறு தெரிவித்துள்ளார். இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்தும், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் தீர்ப்புரையை செயல்படுத்தும் விதமாகவும், ‘குறவன்- குறத்தி ஆட்டம்’ என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு ஆணையிடுகிறது.
மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன்- குறத்தி ஆட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை தமிழ்நாடு குறவன், பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க முன்னாள் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றுள்ளார், தமிழ்நாடு முதல்வருக்கும், இதற்காக போராடிய அனைத்து சங்கத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.குறவன்-குறத்தி ஆட்டம் என ஆபாசமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு , ஜாதி அல்லது பழங்குடியினரின் பெயரைப் பற்றி எந்த நடன நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அரசுக்கு
நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டதன் அடிப்படையில் , குறவர் சமூக மக்களின் சமூக அந்தஸ்தை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக சித்தரிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் அல்லது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. புகார் அளித்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அவதூறான நடன வீடியோக்கள் குறித்து தேவையான ஆதாரங்களுடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய தனி போர்ட்டலை திறக்க சைபர் கிரைம் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வீடியோக்களை சரிபார்த்து, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றை நீக்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, சமூக வலைதளங்களில் வீடியோக்களில் பயன்படுத்தப்படும் குறவர்களுடன் நடனமாடும் பெயர்களை நீக்கி, பொதுமக்கள் தங்களின் புகார்களை ஆதாரங்களுடன் புகார் அளிக்க சைபர் கிரைம் துறை மூலம் தனி போர்டல் அமைத்து, மீறுபவர்கள் மீது தகுந்த கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்போது அரசாணையும் வெளியிடப்பட்டது.
கருத்துகள்