அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் நீக்கத்தை முதன்மை வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் நீக்கத்தை முதன்மை வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்: அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிலுள்ள முக்கியக் கருத்து
‘பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ? ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன்,
கட்சியின் செயல்பாடுகளையும் பாதிக்கும் என்பதால், தடை எதுவும் விதிக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் முக்கியமான விபரம்( அதிமுக + அமமுக இணைந்த தொண்டர்கள் எண்ணிக்கை அது என்பது தான் இதில் முக்கியம் அதிமுகவில் மட்டும் அவ்வளவு நபர்கள் உண்டா என்பது எழுவினா )
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதெனவும், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்தநிலையில்,
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை இன்று மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தார். 85 பக்கங்களைக் கொண்ட அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமுள்ளது என்றபோதும்
கூட, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை மாதம் 11-ஆம் தேதியில் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க முடியாது.
காரணம், ஜூலை மாதம் 11ஆம் தேதியில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. 2460 கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுபடியாகக்கூடியவை.
பொதுச் செயலாலர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், எடப்பாடி கே.பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்த தீர்மானங்களும் செல்லும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானங்களுக்கு தடை விதித்தால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டியது வரும். ஓபன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசயசாமிஆகிய இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கக் கூடிய அபாயம் ஏற்படும். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்புத் தீர்மானத்தைப் பொறுத்தவரை, அதுகுறித்து முதன்மை வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். 7 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய விதி மீறப்பட்டுள்ளது, என்றாலும் கூட, அந்தச் சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதித்தால், அது அக்கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அந்தத் தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தாலும், கட்சியை வழிநடத்துவதற்கு தலைவர் இல்லாமல், கட்சி பாதிக்கப்படும்.
பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், இதில் தடை எதுவும் விதிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆணால் இந்த வழக்கின் முதன்மை வழக்கு அதிமுக அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகளின் படியே வர வாய்ப்பு உண்டு ஆனால் இன்னும் அடுத்த தீர்ப்புக்கு நாமும் காத்திருப்போம்
அதுவரை ஒரு பொது நீதி அந்தக்காலப் பள்ளி நாட்களில் பணக்காரப் பையன் உடன் பலர் மொய்ப்பார்கள். இடைவேளை நேரத்தில் ஐஸ் ,மாங்காய், பனம்பழம், நெல்லிக்காய் கொடுக்காய்புளி ,என்று பிய்த்து உதறுவான்.
உடன் இருப்பதில் ஒரு இல்லாத வீட்டுப் பையன் இவனை சரியாகப் பயன்படுத்துவான், ஏனையோரை விட. அவனுக்கு விவரங்களும் அதிகம் தெரியும்.
விவரம் தெரிந்த அந்த இல்லாத வீட்டுப் பையன் இது போன்ற பல பணக்கார மாணவர்களின் செலவுகளை தீர்மானிப்பான். திடிரென மாயமும் ஆவான். இது அந்தப் பொதுக்குழு தீர்மானப் பதிவல்ல.
கருத்துகள்