குடியரசுத் தலைவர் ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை வழங்கினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை கொச்சியில் இன்று (மார்ச் 16, 2023) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் உத்தி, ராணுவ, பொருளாதார மற்றும் வணிக நலன்களுக்கு கடல்சார் வலிமை முக்கியமானது என்று கூறினார். நீண்ட கடற்கரை, தீவுப் பகுதிகள் மற்றும் பெரிய அளவிலான கடலோர மக்கள்தொகையுடன் கூடிய உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா போன்ற நாட்டிற்கு, வலுவான மற்றும் நவீன கடற்படையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது
என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள்