ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரம் என்பது ஒரு குற்றவியல் சட்டம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தைப் பொறுத்தவரை இது ஒரு குற்றவியல் சட்டம் சார்ந்தது. இதைச் செய்தால் இது குற்றமென்று சட்டம் சொல்கிறது. எனவே இதை குற்றவியல் பிரிவு சட்டமகாத்தான் பார்க்க வேண்டும். குற்றவியல் விவகாரத்தில் சட்டமியற்றுவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஏக மனதாக தீர்மானமானமாக நிறைவேற்றி மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக எந்த முடிவும் எடுக்காமலிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று தினங்களுக்கு முன் திருப்பியனுப்பினார்.
மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து ஆளுநர் ஆா்.என்.ரவி கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அதிகாரமில்லை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முகாந்திரமுமில்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளதாக தெரிகிறது. மசோதாவானது
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து பின் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களையும் பதிவு செய்ததையடுத்துக் கூடிய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்ட நிலையில்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. மாநில அரசுகக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்துச் சொன்ன ப.சிதம்பரம்
ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு குற்றவியல் சட்டம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு குற்றவியல் சட்டம். இதை செய்தால் இது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. எனவே இதை குற்றவியல் பிரிவு சட்டமகாத்தான் பார்க்க வேண்டும். குற்றவியல் விவகாரத்தில் சட்டம் இயற்றுவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்பது புதுப் புரளி. இதனை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை தூண்டி விடுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநில மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலுமில்லை. வதந்திகளைப் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறுவது தவறான கருத்தாகும். இது வளர்ச்சி இல்லை. வீக்கம்.. வளர்ச்சி என்பது வேறு... வீக்கம் என்பது வேறு... தவறான பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் வளர பாஜக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் இது ஒருபோதும் எடுபடாது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர்கள் வைஸ்ராய்க்ள் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதில் பொதுநீதி யாதெனில் முதலில் அது தடை மசோதாவே அல்ல. ஒழுங்கு முறை மசோதா. மாநில அரசு ஒரு செயலியை தடை செய்ய முடியாது அதை முறைப்படுத்தத் தான் முடியும்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மத்திய தொலைத்தொடர்புத்துறை மூலம் நாடு முழுவதும் நடவடிக்கை தேவை. மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்படாத விஷயம் இது. என்பதும் கூர் நோக்க வேண்டும்
கருத்துகள்