பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET (UG) -2023-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.
2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், https://cuet.samarth.ac.in/. என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதள www.pondiuni.edu.in/admissions-2023-24/ முகவரியில் பட்டப்படிப்புகளில் சேர தகுதியான பாடங்கள் மற்றும் இதர தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு https://cuet.samarth.ac.in/ என்ற NTA-வின் இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் விவரங்களை ஏப்ரல் 1 முதல் 3 வரை திருத்தம் செய்யலாம்
கருத்துகள்