வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரப்போகும் 10 புதிய மாற்றம்
நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் 31, 2023 முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அதாவது இன்னும் 2 நாள்களில் புதிய நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய வருமான வரி விதிப்பில் வரவுள்ள புதிய மாற்றங்கள்:
மாத சம்பளம் வாங்குவோர்களுக்காக. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சத்திற்குள் வருமானம் பெற்றவர்கள், புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது மட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள தனி நபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ், கூடுதல் கட்டணமாக 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.புதிய வரி விகித அடுக்குகள்.பழைய வருமான வரி விதிப்படி, ரூபாய் 3 லட்சம் வரை வருமானம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் புதிய வருமான வரி விதி மாற்றங்களின் படி, இனிவரும் காலங்களில் தனி நபர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் என்றால் 5 சதவீத வரியும், ரூ.6 முதல் ரூ. 9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.ஏப்ரல் 01,முதல்,
G,pay E,pay, Gogul,Pay, என அனைத்து! pay விற்கும்! ஒரு சதவீதம் வரிவிதிப்பு, நாளை முதல் மாற போகிறவை
இந்த நிதியாண்டு முடிகிறது நாளையிலிருந்து பல விஷயங்களில் மாற்றம் வருகிறது.
பல பொருட்களின் விலைவாசிகள் உயர்கிறது.
இந்த ஏப்ரல் முதல் வர்த்தக ரீதியாக பல மாற்றங்களும், புதிய விலை நிர்ணயங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் உத்தேச பட்டியல்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயிக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றதன்படி ஏப்ரல் முதல் தேதி எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம்
வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்தது.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் கடந்த 312 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது. இந்நிலையில் நிதியாண்டு தொடக்கம் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31 ஆம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது
குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான வரி செலுத்த வேண்டிய நபர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட வரித்தொகையை செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி 31 ஆம் தேதியான இந்று வரை முன்கூட்டிய வரியை செலுத்தலாம். அதன் பிறகு வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டு தொடங்கிய பின்பு வேறு நிறுவனத்தில் பணியில் இணைந்திருந்தால் புதிய நிறுவனத்தில் 12பி படிவத்தை தாக்கல் செய்வது கட்டாயம். அந்தப் படிவம் பழைய நிறுவனத்தில் பெற்ற ஊதியம் தொடர்பான விவரத்தை கொண்டிருக்கும். அதனுடன் சேர்த்து புதிய ஊதியத்துக்கு ஏற்ப வரிப்பிடித்தம் செய்யப்படும். 12பி படிவத்தை புதிய நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் மூல வரிப்பிடித்தம் குறைவாக இருக்கும். ஆனால் வருமான வரிப்படிவம் தாக்கல் செய்கையில் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.
பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்துள்ள நபர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாமினி (வாரிசு) நபர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். யாரையும் நாமினியாக பரிந்துரைக்க விரும்பவில்லை எனால் அதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
கருத்துகள்