புள்ளியியல் தொடர்பான கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சென்னை மண்டல கள செயல்பாட்டு பிரிவு மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை இணைந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சியை 2023 மார்ச் 23 அன்று நடத்தின. புள்ளியியல் தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கவும், கொள்கை வகுத்தல் மற்றும் திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் ஏ-விங்கில் உள்ள மாநாட்டு அரங்கில் இந்த வினாடி-வினா நடத்தப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கள செயல்பாட்டுப்பிரிவின் துணை இயக்குனர் மற்றும் அலுவலக தலைவர் திருமதி அனிதா பார்த்தசாரதி வரவேற்பு உரையாற்றினார். சென்னை தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குனர் டாக்டர் பி டி சுபா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை தலைவர் திருமதி எம் ஆர் சிந்துமோல் சிறப்புரை ஆற்றினார். புள்ளியியல் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இப்போட்டியில் சென்னை தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியின் மாலோலன் மற்றும் ஜெயக்குமார் குழுவினர் முதல் பரிசை வென்றனர். தாம்பரம் பாரதி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதியந்த் கார்த்திக், சிவனேஷ் 2-வது இடம் பிடித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
கருத்துகள்