அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல். பொதுயிடங்களில் முகக்கசவம் .
அணிவது கட்டாயம் என கேரளா மாநில அரசு உத்தரவு: இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களுக்குப் பின் கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்கிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவுகிறது. 138 நாட்களுக்கு பிறகு நேற்று 1,134 பேருக்கு புதிதாக இத் தொற்று பரவியதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 7026 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். அதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்தது. இன்புளூயன்சா வைரசுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் பரவி வருவதால் கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களின் அரசுகளை சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு எச்சரிக்கைப்படுத்திய நிலையில் கேரளாவில் ஓரே நாளில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது
அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள், ICU மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை போதிய இருப்பில் வைக்க அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் பரிசோதனைக் கருவிகளுடனஹ மருந்துகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கேரளா மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்