ஆவின் தயிர் நிரப்பிய பாலித்தீன் பைகளீல் இனி தயிர் என்பதுடன் ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்திலுள்ள பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களான ஆவின் மற்றும் நந்தினி ஆகியவற்றில் தயிர் பாக்கெட்டுகள் மீது ‘தஹி’ என்றும் அடைப்புக் குறிக்குள் அந்தந்த மாநில மொழிகளில் தயிர் எனவும் மொசாரு எனவும் குறிப்பிடவேண்டுமென்றும் கூறியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை ஹிந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இணையத்தளங்களில் வானிலையை குறிக்க ‘மௌஸம்’ என்ற வார்த்தை பயன்பாட்டிலுள்ளது போல் நீர்வழி என்பது ஜலசக்தி என அரசு இணையதளங்கள் மற்றும் பல்வேறு செயலிகள் மூலம் ஹிந்தியைத் திணிக்கும் வேலை என்பதனால் பிறமொழிக் கலப்புடன் பேசுபவர்களிடம் அபராதம் விதிக்க நேரிட்டால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதிக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.- தயிர் பாக்கெட்டுக்களில் ஹிந்தி வார்த்தைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
அதில் "குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்" என்று தயிர் பாக்கெட்டுக்களில் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! StopHindiImposition. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுக்களில் "தாஹி" என்ற ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படடன.
“தயிரை 'தாஹி' என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறல்ல; திட்டமிடப்பட்ட ஹிந்தித் திணிப்பு, ஹிந்தி மொழியை தமிழர்களிடம் திணிப்பதில் இது ஒரு புதிய யுத்தி என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறேன்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்