தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமிக்கப்பட்டார்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டார்.
மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநராக (டிஎம்இ) ஆக இருந்த டாக்டர் நாராயணபாபு 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். ஆகவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், டிஎம்இ கூடுதல் இயக்குநராகவுமிருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் டிஎம்இ இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில், டிஎம்இ இயக்குநராக ஆர்.சந்திமலர் நியமிக்கப்பட்டர். அதற்கான உத்தரவை மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) மருத்துவர் ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டார்.தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பொறுப்பு இயக்குநராக திறம்படப் பணியாற்றிய சாந்திமலர், முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மருத்துவர்கள், முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு பணியாளர்களின் நலன்களையும் பாதுகாத்து பொதுமக்களுக்கு உரிய மருத்துவச் சேவை வழங்குவதிலும் அவர் சமரசமின்றிச் செயல்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்