விசாரணை என்ற பெயரில் பல் உடைத்து காது கிழிக்கும் பல்வீர்சிங் IPS மற்றும் அவருடைய செயல்களுக்குத் துணை போன காவலர்களை
காப்பாற்றுவதற்காக செய்தித் தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் கடந்த நான்கு நாட்களாக இந்தக் கொடூர சம்பவம் குறித்த எந்த விவாதங்களும் செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தப்படவில்லை என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக அவர்கள் நடத்திய பல் பிடுங்கும் விவாதங்கள் பற்றிய தொகுப்பை நீங்கள் காணலாம் ஆகையால் இவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பலரது பற்களை உடைத்து மர்மமாகத் தாக்கி கொடிய சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட பல்வீர் சிங்க் IPS மற்றும் இதர காவல்துறை அலுவலர்கள் மீது FIR பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில் முதல்வர், தலைமை செயலர் மற்றும் காவல் துறைத் தலைவருக்கு புகார் மனு அளித்துள்ளார்கள்
சட்டமன்றத்தில் முதல்வர் விசாரணை நடைபெறும் என்று அறிவித்த சில மணி நேரத்தில் புகார் அளித்த ஒருவர் கீழே விழுந்து பல் உடைந்ததாகச் சொல்கிறார். இன்னொருவரை தானாக பல் விழுந்ததாக எழுதிய கடிதத்தில் கையெழுத்து போட வற்புறுத்தியதாகச் சொல்கிறார். பல் வீர் சிங்குக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த நால்வர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். IPS அதிகாரிக்கு எதிராக சாட்சி அளித்த மற்றொருவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிட்டால் காவல்துறை தான் பொறுப்பு என்று அறிவித்து உச்சகட்ட பயத்துடன் இருக்கிறார்.
தவறு செய்த IPS அதிகாரியை காப்பாற்ற முதல்வர் உத்தரவுக்கு எதிராக ஒட்டு மொத்த காவல்துறையும் வேலை செய்து கொண்டிருக்கிறதா?
பல்வீர் சிங்கை டிஸ்மிஸ் செய்து FIR பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைத்து மக்கள் மத்தியில் திமுக அரசு நம்பிக்கையை ஏற்படுத்துமா? என்பது பலருக்குமான எழுவினா?
கருத்துகள்