தேசிய உற்பத்தி புதுமைக் கண்டுபிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது,
இது இந்திய உற்பத்தி துறையில் போட்டித் தன்மையை மேம்படுத்த உதவும்
தேசிய உற்பத்தி புதுமைக் கண்டுபிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் எஸ் சந்திரசேகர் 27, ஏப்ரல் 2023 அன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய டாக்டர் சந்திரசேகர், தேசிய உற்பத்தி புதுமைகண்டுப்பிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கை இந்திய உற்பத்தித் துறையில் போட்டித் தன்மையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பை அதிகரிக்கவும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
நிறுவனங்களின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உகந்த நடவடிக்கைகள் மற்றும் தடைகள் குறித்த விரிவான தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார். உற்பத்தி நிறுவனங்களின் புதிய உற்பத்திப் பொருட்கள், சேவைகள், வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாநிலங்களும், துறைகளும், எவ்வாறு செயலாற்றியுள்ளன என்பது குறித்து நுணுக்கமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் சந்திரசேகர் தெரிவித்தார்.
கருத்துகள்