கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10-மணிக்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகமண்டலத்திற்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். காடுகளின் நடுவே இந்த ரயிலில் பயணிக்கும்போது, இயற்கை எழில் காட்சிகளை கண்டு களிக்கலாம் என்பதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு உதகமண்டலம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35-மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அங்கு பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பள்ளிகள் விடுமுறை காரணமாக மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதனால் பயணச்சீட்டுகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதைக் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் இடையே கோடை காலச் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சேலம் விருதாச்சலம் பகுதியிலுள்ள பயணிகளுக்கான
சேலம் - விருத்தாசலம் இடையே இயக்கப்படும் இரண்டு ஜோடி தினசரி ரயில்கள் விரைவுபடுத்தப்பட உள்ளன.
இயங்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 01, 2023 முதல் திருத்தப்பட்ட நேரங்கள் நடைமுறைக்கு வருகிறது.
கருத்துகள்