பணம் பறித்த வழக்கில் சாட்சியை மிரட்டிய மதுரை பெண் காவல் ஆய்வாளர் பணி நீக்கம்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய வசந்தி 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பை தைத்து விற்கும் வியாபாரி அர்ஷத் என்பவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை ஆய்வாளர் வசந்தி கூட்டாளிகளுடன் சேர்ந்து பறித்துச் சென்றதாக புகாரில் எழுந்தது. காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த நிலையில் வசந்தி நிபந்தனை ஜாமினில் பிணையில் உள்ள. நிலையில் வழக்கிலுள்ள சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்து முக்கியச் சாட்சியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதி நபர் ஒருவரை மிரட்டியுள்ளது குறித்து புகார் எழுந்த நிலையில் முன்னாள் ஆய்வாளர் வசந்தி மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், வசந்தியை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடு உத்தரவு மதுரை காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.காவல் ஆய்வாளர் பதவி கிடைத்தும் பணத்துக்காக வழிப்பறி செய்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் சாட்சியை கலைக்க முயற்சித்து நிரந்தரமாக பணியை இழந்துள்ளார் இச் சம்பவம் தவறுகள் செய்யும் காவல்துறை ஊழல் வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது
அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வசந்திக்கு எதிரான மிரட்டல் புகாரை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் குழு அமைத்து விசாரித்து முகாந்திரமிருக்கும் பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கலாமென உத்தரவிட்டது.
அதன்படி துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவிட்டார்.
கருத்துகள்