சிவகங்கை பாம்கோ தலைவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு இணை பதிவாளர் உத்தரவு
சிவகங்கை மாவட்ட மொத்தக் கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலை (பாம்கோ) யில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, அதன் தலைவரான ஏ.வி.,நாகராஜனை அப்பதவியிலிருந்து நீக்கி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட மொத்தக் கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் 140 பொது வினியோகக் கடை, மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவைப் பிரிவுகள் செயல்படுகின்றன.
கொரோனா பரவல் காலத்தில் பொது வினியோக மளிகைப் பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலமாகவே வழங்கப்பட்டதில் பல லட்சம் ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்க கூட்டுறவு இணை பதிவாளர் ஜினுவிற்கு புகார் சென்றது குறித்து விசாரிக்க கூட்டுறவு சிவகங்கை துணை பதிவாளர் பாலசந்தர் தலைமையில் குழு அமைத்தனர். குழுவிற்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் செயல்படலாம் என்பதால் பாம்கோ தலைவர் ஏ.வி., நாகராஜன் தலைவர் பதவியிலிருந்து பணி இடை நீக்கம் செய்து இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கூட்டுறவுதுறை அமைச்சராக கே.ஆர். பெரியகருப்பனின் உள்ள நிலையில் தலைவர் அவரது மாவட்டத்தில் அதிமுக சார்ந்த ஒருவர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டது தற்போது பேசப்படுகிறது. விசாரணை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரலாம்
கருத்துகள்