இராணுவத் தளபதிகள் உச்சிமாநாடு ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெற்ற ராணுவத் தளபதிகள் உச்சிமாநாட்டில்
கேந்திர, பயிற்சி, மனிதவள மேம்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பரதரப்பட்ட விஷயங்கள் குறித்தும், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ராணுவத்தை வடிவமைக்கும் முக்கிய முடிவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. காணொலிக் காட்சி வாயிலாகவும், நேரடியாகவும் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெற்றது.
தற்போதைய மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்பு சூழல்கள் குறித்தும், இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்தும் ராணுவத் தளபதிகளும், மூத்த நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட “மாற்றத்திற்கான ஆண்டு” என்பதன் ஒரு பகுதியாக நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் இடையீடு, மனித வள மேம்பாடு, கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அக்னிபத் திட்டத்தை திறம்பட அமல்படுத்தும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. படைவீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களையும், முன்முயற்சிகளையும் அறிமுகப்படுத்த கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. நவீன தகவல் தொடர்பு அமைப்புமுறையின் மீது சார்பு அதிகரித்திருக்கும் வேளையில், பாதுகாப்பான இணைப்புகளை உறுதி செய்வதற்கான சைபர் நிர்வாக பிரிவை விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
அடுத்த மாதம் 6-வது ஆண்டை நிறைவு செய்யவுள்ள ரிபப்ளிக் குழுவினருக்கு தமது உரையின்போது பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அளவை எட்டுவதற்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும், 2014-ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே 2 ட்ரில்லியனை அடைந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக்கு இடையேயும், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியதை அவர் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் கூட ஸ்தம்பித்துள்ள வேளையில், நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டு வந்ததோடு, விரைவாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய அரசு கொண்டு வந்த கொள்கைகள், முதல் தர பயன்களை மட்டுமல்லாது, அவற்றின் இதர தாக்கங்களிலும் கவனம் செலுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தினால் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3.75 கோடியாக உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். இத்திட்டம், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் தன்னம்பிக்கையை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது, என்றார் அவர். முத்ரா திட்டத்தின் கீழ் 40 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 70% பயனாளர்கள் பெண்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நேரடி பயன் பரிவர்த்தனை, மின்சாரம், தண்ணீர் வசதிகள் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்டவை அடிமட்ட அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர் திரு மோடி, “முதன்முறையாக நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது”, என்று தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் தலித்துகள், நலிவடைந்தோர், பழங்குடிகள், பெண்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் நிதி கணக்கு, ஆதார் மற்றும் செல்பேசி அடங்கிய ஜாம் திட்டத்தின் வாயிலாக 10 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 45 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, சுமார் ரூ. 28 லட்சம் கோடி பயனாளிகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு அரசின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்த சுதந்திரத்தின் அமிர்த காலம், ‘அனைவரின் முயற்சிக்கு' ஏற்ற தருணம். ஒவ்வொரு இந்தியரின் கடின உழைப்பும், வலிமையும் செயல்பாட்டிற்கு வரும்போது, வளர்ந்து இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியும்”, என்று கூறி பிரதமர் தமது உரையை புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே ஏப்ரல் 27, 2023 அன்று கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ரஸ்லன் சசைலைக்கோவ் மற்றும் தஜிகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ஷெரலி மிர்சோவுடன் தனித்தனியே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பரம் இருதரப்பு நலன் சார்ந்த கூட்டாண்மையை விரிவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 28, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் விடுத்த அழைபின் பேரில், இரு நாட்டு அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர்.நிறைவு செய்தார்.ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சருடன், சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று (2023 ஏப்ரல் 27) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா - சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர்.
எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு வித்திடுவதன் மூலமே இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தீர்வு காண்பது அவசியம் என்றார். அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மீண்டும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங் அவ்வாறு செய்வதன் மூலம் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள்