ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வாயிலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை. நிலக்கரிப் போக்குவரத்து ஊழல்
2018 ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சார்பில் ஊழலில் ஈடுபட்ட தமிழ் நாடு மின்சார வாரியத்தின் ஊழியர்கள் மற்றும் சௌத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திலும் நடத்தியுள்ள சோதனையில் பல முக்கியமான ஆவணங்களாக பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வைப்புத்தொகை ரூபாய் 360 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை இந்தப் புகாரை விசாரிக்காமல் காலம் கடத்தியதுடன் மறைத்த இந்த நிறுவனத்தைக் காப்பாற்றி அவர்களின் வைப்புத் தொகையான ரூபாய் 300 கோடியை திருப்பிக் கொடுக்க 2022 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் குழு அமைத்து முடிவெடுக்கப் போட்ட திட்டத்தை தக்க சமயத்தில் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து முதல தகவல் அறிக்கையை பரிவு செய்ததில் நேற்று முன்தினம் வரை சோதனையும் நடத்தப்பட்டது . நிலக்கரிப் போக்குவரத்து ஊழல். எங்கே எப்படி நடந்தது? அது யார் ஆட்சியில் நடந்தது? அதனால் அரசுக்கு எத்தனை கோடிகள் இழப்பு?ஆதாரங்களுடன்
தமிழ்நாட்டில் ரூபாய் 3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் செய்தது போல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த சுமார் 50000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட அதானி மற்றும் சில நிறுவனங்கள் மீது ஆதாரங்களுடன் புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரிக்காத நிலையில் பிரதமரின் ஒரு அறிவிப்பு சிபிஐ வட்டாரத்தில் சமீபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபிக்கு நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நன்கொடையாளர்கள் செய்த மோசடிகள் மீதும் சிபிஐ வழக்கும் தொடராது விசாரணையும் செய்யாது என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் பொது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில்
சிபிஐ அதானி மீது FIR போட்டு விசாரிக்குமா? என்ற வினா பலருக்கும் எழுகிறது. பிரதமர் அதானியை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடுவாரா? என்பதே எழுவினா
நிலக்கரி ஊழல் 908 கோடி ஊழலில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற அடிப்படை விஷயம் கூட சட்ட நிபுனர்கள் சொல்லித் தான் தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தது முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்ட அடுத்த நாளே இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் ? அல்லது இனியாவது நடக்க வேண்டும் அதில்
கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் 908 கோடி ஊழலில் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அதானி என்ற பெயரை கேட்டாலே மத்திய மாநில அரசுகளும், அதிகாரிகளும் ஒரு நடுக்கம் காரணமாக ஓட்டம் பிடிக்கிறார்கள். அதை ஆதாரங்களுடன் கொடுத்த நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய CBI அதிகாரிகள் தயக்கம் காட்டக் காரணமாவது எது என்ற வினா இதுவரை எழாமல் இல்லை ஆனால் தற்போது தான் சிலர் மீது பாய்கிறது அந்தப் பாய்ச்சல் காரணமாக செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த சுவீகாரம் வந்த நபர் வசமாகவே ஆதரங்களுடன் அமலாக்கத்துறையில் சிக்கி விட்ட தகவல் வருகிறது அதை இனி வரும் நாட்களில் காணலாம்.எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என்று சண்டை போட்டுக் கொண்டு இருப்பவர்கள் கடைசி வரை வெட்டியாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். இதில் பொதுநீதி யாதெனில் :- ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒரு நாள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்
கருத்துகள்