ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனங்களில் மூன்றாவது நாளாக நடந்த சோதனைகள் மூலம் மூன்றாண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட வங்கிப் பணபரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி- ஸ்கொயர் குரூப் திமுகவின் தலைவர் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமான நிறுவனம் எனவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்த நிறுவனம் 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஜி- ஸ்கொயர் நிறுவனத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின் சோதனைகள் .
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் அவர்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜி- ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திமுகவுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய நபரது நிறுவனம் என்பதால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு அழைத்து வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில்
சென்னை சேத்துப்பட்டு, ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகம், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீடு, அவர் மகன் கார்த்திக் வீடு, ஆடிட்டர் சண்முக மூர்த்தி, முதல்வர் மருமகன் சபரீசனின் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனப் பல இடங்களில் மூன்று நாட்களாக சோதனை மேற்கொள்ளப்படுவதில்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவடைந்தது.கடந்த மூன்று வருடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு மற்றும் பத்திரப்பதிவு செய்துள்ள நிலங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். மேலும் ஜி ஸ்கொயர் வங்கி கணக்கு விவரங்களை பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இதனை தொடர்ந்து ஈட்டிய வருமானத்திற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் முறையாக வரி செலுத்தி உள்ளனரா அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனரா எனவும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் 2019 ஆம் ஆண்டு இதே நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை ஒப்பிட்டும் விசாரணை நடைபெறுவதாக வும்,மூன்று நாட்களாக நடைபெறும் இச்சோதனை மேலும் சில நாட்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் ,யார் இந்த பாலா சைக்கிளில் தொடங்கிய வியாபாரம்...!
இன்று பல ஆயிரம் கோடிகள் வரை தாண்டி விட்டது!!
அவரது உழைப்பு!
ஆம் ஒட்டன்சத்திரம் அருகே கிராமம் பேபி அம்மாவின் செல்லப் பிள்ளைதான் ராமஜெயம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற தாக்கம் திருப்பூரில் சைக்கிளில் தெருத்தெருவாக சேர், ஃபேன், டிவி என விற்பனை செய்து கொஞ்சமாக முன்னேறி திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே பேபி எலக்ட்ரானிக்ஸ் என்பது அவரது தாயார் பெயரில் 10 க்குப் 10 ரூமில் உருவாகி படிப்படியாக பல ஷோரூம் திறந்து வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து பின் சரிவு ஏற்பட்டு சென்னைக்கு சென்று ரியல் எஸ்டேட் செய்து படிப்படியாக முன்னேறி இன்று ஜி ஸ்கொயர் நிர்வாகியாகி பாலா என தனது பெயரை மாற்றிக் கொண்ட உண்மையான உழைப்பாளி தான் ! ராமஜெயம் திருப்பூரில் பேப்பர் விளம்பரம் செய்வார் அப்போதே செய்தி இதழ்களில் சைக்கிளில் தொடங்கி காரில் வலம் வரும் ராமஜெயம் என கட்டுரை வந்த காலம் உண்டு உலகையே ஒரு காலத்தில் வலம் வருவேன் என கூறினார். பாலாவாக மாறிய பின் ராமஜெயத்தை பலரும் பார்க்கமுடிய தான்.! மாற்றங்கள் மனிதனை புரட்டிப்போட்டுவிட்டது ....ஆக இப்போது பாதி உண்மைகள் மட்டும் மீதி உண்மைகள் பேசும் போது நடப்பு அரசியல் கலப்பு வரும் ....அப்போது தான் ஊழல் இலஞ்ச இலாவண்யங்கள் துவங்குகிறது...!
கருத்துகள்