மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
அவர்களுடைய செயல் மற்றும் திறன் மூலம், நாட்டின் எளிய மக்களிடையே சிபிஐ நம்பிக்கையைப் பெற்றுள்ளது
வளர்ந்த இந்தியா என்பது தொழில் ரீதியான மற்றும் திறன்மிக்க நிறுவனமாக இல்லாமல் சாத்தியமில்லை
நாட்டில் ஊழலை அகற்றுவதுதான் சிபிஐ-யின் முதன்மையான பொறுப்பு
ஊழல் என்பது சாதாரண குற்றமல்ல, இது ஏழை மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது இதர குற்றங்களுக்கு வழிவகுக்கிறது, நீதி மற்றும் ஜனநாயகப் பாதைக்கு மிகப் பெரிய தடையாக ஊழல் இருக்கிறது
ஜன்தன், ஆதார், மொபைல் (ஜெஏஎம்) பயனாளிகளுக்கு முழுமையான பயனை உறுதி செய்கிறது
நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு எந்த அரசியல் உறுதிப்பாடும் இல்லை
ஊழலில் ஈடுபட்ட எவரும் காப்பாற்றப்படக் கூடாது. நமது முயற்சிகளில் எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது. இது நாட்டின் விருப்பம், இது குடிமக்களின் விருப்பம். நாடு, சட்டம் மற்றும் அரசியலமைப்பு உங்களுடன்
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறந்த சேவைக்காக குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் பெற்றவர்கள், சிபிஐ-யின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பதக்கங்கள் வழங்கினார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் உள்ள சிபிஐ-யின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்துவைத்தார். சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்ட ஆண்டின் நினைவாக தபால்தலையை அவர் வெளியிட்டார். அத்துடன் சிபிஐ-யின் ட்விட்டர் கையாளுதலையும் அவர் தொடங்கிவைத்தார். சிபிஐ-யின் மேம்படுத்தப்பட்ட நிர்வாகக் கையேடு, வங்கி மோசடி குறித்த விவரங்கள், சிபிஐ வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், வெளிநாட்டு பரிமாற்றத்திற்கான சர்வதேச காவல்துறை ஒத்துழைப்புக் குறித்த கையேடு ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்டத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான சிபிஐ 60 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 6 தசாப்தங்களில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், சிபிஐ தொடர்புடைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின் கோப்புகள் இன்று வெளியிடப்பட்டதன் மூலம் சிபிஐ-யின் வரலாற்றுப் பதிவை நமக்கு அளித்துள்ளது. சில நகரங்களில் புதிய அலுவலகங்களில் ட்விட்டர் கையாளுதல் அல்லது இதர வசதிகள் இன்று தொடங்கப்பட்டது. சிபிஐ-யை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார். அவர்களுடைய செயல் மற்றும் திறன்கள் வாயிலாக, நாட்டின் சாதாரண மக்களின் நம்பிக்கையை சிபிஐ பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இன்றும் கூட தீர்க்க இயலாத சில வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நகரங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதை உதாராணமாகக் கூறினார். பஞ்சாயத்து அளவிலான விவகாரங்கள் எழுந்தபோது கூட, சிபிஐ விசாரணை வேண்டும் என்று குடிமக்கள் ஒருமித்த குரலில் தெரிவித்ததாகக் கூறினார். சிபிஐ-யின் பெயர் அனைவரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இது உண்மை மற்றும் நீதிக்கான அடையாளமாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார். சாதாரண மக்களின் நம்பிக்கையை அது பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிபிஐ-யின் 60 ஆண்டுகாலப் பயணத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் பிரதமர் வாழ்த்தினார்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்த அமைப்பினர் தாங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்காக இந்தியர்கள் உறுதியேற்க வேண்டும் என்ற அமிர்தகால தருணத்தில் எதிர்காலத் திட்டத்திற்காகவும் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்காகவும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியா என்பது தொழில் ரீதியான மற்றும் திறன்மிக்க நிறுவனமாக இல்லாமல் சாத்தியமில்லை என்றும் சிபிஐ-யில் இது மிகப் பெரிய பொறுப்பை இது அளிப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஊழலை அகற்றுவது சிபிஐ-யின் முதன்மையான பொறுப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊழல் என்பது சாதாரண குற்றமல்ல, இது ஏழை மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது, இதர குற்றங்களுக்கு வழிவகுக்கிறது, நீதி மற்றும் ஜனநாயகப் பாதைக்கு மிகப் பெரிய தடையாக ஊழல் இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் ஊழல் நடைபெறுவது ஜனநாயகத்தை சிதைப்பதாகவும், இளைஞர்களின் கனவுகளைக் கலைப்பதாகவும் கூறினார். ஊழல் தொடர்ந்து நாட்டின் வலிமை, வளர்ச்சி ஆகியவற்றை சிதைப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர்பாராதவிதமாக இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் ஊழல் மரபு வழியாக இருந்ததாகவும் அதை அகற்றுவதற்குப் பதிலாக சிலர் அந்த நோயை வளர்த்தெடுத்ததாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியதாக பிரதமர் கூறினார். அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்ததாக நினைவு கூர்ந்த அவர், 2-ஜி, 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். அரசு மின்னணு கொள்முதல் தளம், மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ததாகக் குறிப்பிட்டார்.
தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் இதுவரை தலைமறைவு குற்றவாளிகளின் 20,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசின் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஊழல் மூலம் அரசின் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ரேஷன், வீடு, உதவித்தொகைகள், ஓய்வூதியத் தொகை அல்லது இதர அரசு திட்டம் ஆகியவை இதில் அடங்கியதாக அவர் கூறினார். இதனால் உண்மையான பயனாளிகள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைவார்கள் என்று தெரிவித்தார். ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பும்போது அதில் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைந்ததாக பிரதமர் கூறினார். நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ரூ.27 லட்சம் கோடியை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு ரூபாய்க்கு 15 பைசா என்ற கருத்தியல் நிலவியிருந்தால் அதில் 16 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே காணாமல் போயிருக்கும் என்று அவர் கூறினார். வங்கிப் பயனாளிகள் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் ஆகியவை மூலம் பயனிகள் முழுப்பயனைப் பெறுவதாக இதன் மூலம் 8 கோடிக்கும் மேற்பட்ட போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தவறானவர்களுக்கு போய் சேராமல், நாட்டின் 2.25 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேர்முகத் தேர்வுகள் என்ற பெயரில், நடைபெற்ற பணியாளர் தேர்வு ஊழல் குறித்த பிரதமர் குறிப்பிட்டார். அதனால் தான், மத்திய அரசின் குரூப் –சி, குரூப் – டி பணிகளில் நேர்முகத் தேர்வுகள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார். வேப்பிலை பூச்சு மூலமான யூரியாவால் அதன் தொடர்பான முறைகேடுகள் ஒழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடையும் வகையில், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
புலனாய்வுகளில் தாமதம், குற்றம் இழைத்தவர்களைத் தண்டிப்பதில் தாமதம், அப்பாவிகளை துன்புறுத்துதல், ஆகியவை குறித்து குறிப்பிட்ட பிரதமர், சிறந்த சர்வதேச நடைமுறைகளின்படி திறன்மிக்க அதிகாரிகள், ஊழலை விரைவாக கண்டறியும் வழிவகைகளைக் காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு எந்த அரசியல் உறுதிப்பாடும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். உறுதியாக தயக்கம் இன்றி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற மனிதர்கள், உங்களுக்கு இடையூறு விளைவித்தாலும் நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஊழல் செய்யும் எவரும் தப்பிவிடக் கூடாது என்று தெரிவித்தார். நமது முயற்சிகளில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். இது நாட்டின் விருப்பம், இது குடிமக்களின் விருப்பம். நாடு, சட்டம் மற்றும் அரசியலமைப்பு உங்களுடன் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச பரிவர்த்தனைகள், மக்களின் போக்குவரத்து, சரக்கு மற்றும் சேவை ஆகியவை பெரிய அளவில் விரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதற்கு இடையூறு விளைவிப்பவர்களும் அதிகரித்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு அதன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், பொருளாதார நலன் ஆகியவற்றின் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று பிரதமர் எச்சரித்தார். இந்த வகையில் ஊழல் பணம் செலவிடப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு தரப்பட்ட குற்றம் மற்றும் ஊழல்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தடய அறிவியல் புலனாய்வை பயன்படுத்துவதை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், நவீன தொழில்நுட்பத்தால், குற்றங்கள் கூட உலகளாவியதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சைபர் குற்றங்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் மிக்க தொழில்முனைவோர், இளைஞர்கள், சிறந்த தொழில்நுட்ப இளைய அதிகாரிகள் ஆகியோரை துறையில் இடம் பெறச் செய்ய வேண்டியது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். 75 வகையான முறைகளுக்காக சிபிஐ-க்கு பாராட்டுத் தெரிவித்த அவர், உரிய நேரத்தில் பணியாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிபிஐ அமைப்பின் செயல்முறை, தொடர்ந்து அயராது நடைபெறவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மத்தியப் பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல், அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, சிபிஐ இயக்குநர் திரு சுபோத்குமார் ஜெயஸ்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறந்த சேவைக்காக குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் பெற்றவர்கள், சிபிஐ-யின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பதக்கங்கள் வழங்கினார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் உள்ள சிபிஐ-யின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்துவைத்தார். சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்ட ஆண்டின் நினைவாக தபால்தலையை அவர் வெளியிட்டார். அத்துடன் சிபிஐ-யின் ட்விட்டர் கையாளுதலையும் அவர் தொடங்கிவைத்தார். சிபிஐ-யின் மேம்படுத்தப்பட்ட நிர்வாகக் கையேடு, வங்கி மோசடி குறித்த விவரங்கள், சிபிஐ வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், வெளிநாட்டு பரிமாற்றத்திற்கான சர்வதேச காவல்துறை ஒத்துழைப்புக் குறித்த கையேடு ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்டத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான சிபிஐ 60 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 6 தசாப்தங்களில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், சிபிஐ தொடர்புடைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின் கோப்புகள் இன்று வெளியிடப்பட்டதன் மூலம் சிபிஐ-யின் வரலாற்றுப் பதிவை நமக்கு அளித்துள்ளது. சில நகரங்களில் புதிய அலுவலகங்களில் ட்விட்டர் கையாளுதல் அல்லது இதர வசதிகள் இன்று தொடங்கப்பட்டது. சிபிஐ-யை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார். அவர்களுடைய செயல் மற்றும் திறன்கள் வாயிலாக, நாட்டின் சாதாரண மக்களின் நம்பிக்கையை சிபிஐ பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இன்றும் கூட தீர்க்க இயலாத சில வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நகரங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதை உதாராணமாகக் கூறினார். பஞ்சாயத்து அளவிலான விவகாரங்கள் எழுந்தபோது கூட, சிபிஐ விசாரணை வேண்டும் என்று குடிமக்கள் ஒருமித்த குரலில் தெரிவித்ததாகக் கூறினார். சிபிஐ-யின் பெயர் அனைவரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இது உண்மை மற்றும் நீதிக்கான அடையாளமாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார். சாதாரண மக்களின் நம்பிக்கையை அது பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிபிஐ-யின் 60 ஆண்டுகாலப் பயணத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் பிரதமர் வாழ்த்தினார்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்த அமைப்பினர் தாங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்காக இந்தியர்கள் உறுதியேற்க வேண்டும் என்ற அமிர்தகால தருணத்தில் எதிர்காலத் திட்டத்திற்காகவும் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்காகவும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியா என்பது தொழில் ரீதியான மற்றும் திறன்மிக்க நிறுவனமாக இல்லாமல் சாத்தியமில்லை என்றும் சிபிஐ-யில் இது மிகப் பெரிய பொறுப்பை இது அளிப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஊழலை அகற்றுவது சிபிஐ-யின் முதன்மையான பொறுப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊழல் என்பது சாதாரண குற்றமல்ல, இது ஏழை மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது, இதர குற்றங்களுக்கு வழிவகுக்கிறது, நீதி மற்றும் ஜனநாயகப் பாதைக்கு மிகப் பெரிய தடையாக ஊழல் இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் ஊழல் நடைபெறுவது ஜனநாயகத்தை சிதைப்பதாகவும், இளைஞர்களின் கனவுகளைக் கலைப்பதாகவும் கூறினார். ஊழல் தொடர்ந்து நாட்டின் வலிமை, வளர்ச்சி ஆகியவற்றை சிதைப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர்பாராதவிதமாக இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் ஊழல் மரபு வழியாக இருந்ததாகவும் அதை அகற்றுவதற்குப் பதிலாக சிலர் அந்த நோயை வளர்த்தெடுத்ததாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியதாக பிரதமர் கூறினார். அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்ததாக நினைவு கூர்ந்த அவர், 2-ஜி, 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். அரசு மின்னணு கொள்முதல் தளம், மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ததாகக் குறிப்பிட்டார்.
தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் இதுவரை தலைமறைவு குற்றவாளிகளின் 20,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசின் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஊழல் மூலம் அரசின் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ரேஷன், வீடு, உதவித்தொகைகள், ஓய்வூதியத் தொகை அல்லது இதர அரசு திட்டம் ஆகியவை இதில் அடங்கியதாக அவர் கூறினார். இதனால் உண்மையான பயனாளிகள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைவார்கள் என்று தெரிவித்தார். ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பும்போது அதில் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைந்ததாக பிரதமர் கூறினார். நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ரூ.27 லட்சம் கோடியை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு ரூபாய்க்கு 15 பைசா என்ற கருத்தியல் நிலவியிருந்தால் அதில் 16 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே காணாமல் போயிருக்கும் என்று அவர் கூறினார். வங்கிப் பயனாளிகள் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் ஆகியவை மூலம் பயனிகள் முழுப்பயனைப் பெறுவதாக இதன் மூலம் 8 கோடிக்கும் மேற்பட்ட போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தவறானவர்களுக்கு போய் சேராமல், நாட்டின் 2.25 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேர்முகத் தேர்வுகள் என்ற பெயரில், நடைபெற்ற பணியாளர் தேர்வு ஊழல் குறித்த பிரதமர் குறிப்பிட்டார். அதனால் தான், மத்திய அரசின் குரூப் –சி, குரூப் – டி பணிகளில் நேர்முகத் தேர்வுகள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார். வேப்பிலை பூச்சு மூலமான யூரியாவால் அதன் தொடர்பான முறைகேடுகள் ஒழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடையும் வகையில், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
புலனாய்வுகளில் தாமதம், குற்றம் இழைத்தவர்களைத் தண்டிப்பதில் தாமதம், அப்பாவிகளை துன்புறுத்துதல், ஆகியவை குறித்து குறிப்பிட்ட பிரதமர், சிறந்த சர்வதேச நடைமுறைகளின்படி திறன்மிக்க அதிகாரிகள், ஊழலை விரைவாக கண்டறியும் வழிவகைகளைக் காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு எந்த அரசியல் உறுதிப்பாடும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். உறுதியாக தயக்கம் இன்றி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற மனிதர்கள், உங்களுக்கு இடையூறு விளைவித்தாலும் நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஊழல் செய்யும் எவரும் தப்பிவிடக் கூடாது என்று தெரிவித்தார். நமது முயற்சிகளில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். இது நாட்டின் விருப்பம், இது குடிமக்களின் விருப்பம். நாடு, சட்டம் மற்றும் அரசியலமைப்பு உங்களுடன் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச பரிவர்த்தனைகள், மக்களின் போக்குவரத்து, சரக்கு மற்றும் சேவை ஆகியவை பெரிய அளவில் விரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதற்கு இடையூறு விளைவிப்பவர்களும் அதிகரித்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு அதன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், பொருளாதார நலன் ஆகியவற்றின் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று பிரதமர் எச்சரித்தார். இந்த வகையில் ஊழல் பணம் செலவிடப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு தரப்பட்ட குற்றம் மற்றும் ஊழல்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தடய அறிவியல் புலனாய்வை பயன்படுத்துவதை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், நவீன தொழில்நுட்பத்தால், குற்றங்கள் கூட உலகளாவியதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்
சைபர் குற்றங்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் மிக்க தொழில்முனைவோர், இளைஞர்கள், சிறந்த தொழில்நுட்ப இளைய அதிகாரிகள் ஆகியோரை துறையில் இடம் பெறச் செய்ய வேண்டியது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். 75 வகையான முறைகளுக்காக சிபிஐ-க்கு பாராட்டுத் தெரிவித்த அவர், உரிய நேரத்தில் பணியாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிபிஐ அமைப்பின் செயல்முறை, தொடர்ந்து அயராது நடைபெறவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மத்தியப் பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல், அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, சிபிஐ இயக்குநர் திரு சுபோத்குமார் ஜெயஸ்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்