தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும்,
அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னாவும் ,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யாவும்,
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமாவும்,
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகனும்,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும்,
மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதாவும் நியமனம்,
சிவகங்கை மாவட்டஆட்சியராக ஆஷா அஜித்தும்
இராமநாதபுரம் மாவட்டஆட்சியராக விஷ்னு சந்திரனும் நியமனம்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத்தும்
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜும்,
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுங்கராவும்,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடியும்,
நாகபட்டினம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸும்,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சராயுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆஷா அஜித் IAS
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர், .
கேரளா அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பரபரப்பாக இயங்கியவர். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி, சிவில் சர்வீஸ் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றி பெற்றார். சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்த ஆஷா அஜித், பின் விடுமுறையிலிருந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் இருந்துள்ளார்
தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், அதேபோல திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியை முடித்து மாறுதலில் செல்லும் வினீத் ஐ.ஏ.எஸ். இனி இப்படி ஒரு ஆட்சியர் திருப்பூருக்கு கிடைப்பாரா என்பது சந்தேகம் தான் பணி மாறுதல் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்பு கூட ஊழலில் ஈடுபட்ட ஆளும்கட்சி ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்தவர். தனக்கு பணி மாறுதல் வரும் கடைசி நெடி வரை தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்தார் என்று கூறுவதை விட நேர்மை நிலைநிறுத்தி வாழ்ந்த வினீத் ஐ.ஏ.எஸ் அவர்களின் பணி மாறுதல் அங்குள்ள பலருக்கும் சற்று கண்கலங்க வைக்கிறது. எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்கட்டும் என வாழ்த்தும் கூடடம் அதிகம் மேலும்
தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி. (ADGP) பணியிலுள்ள நான்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு
1992 ஆம் அண்டு பயிற்சி முடித்த அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் டி.ஜி.பி. பணியில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
கருத்துகள்