புதுதில்லியில் மே மாதம் 17 ஆம் தேதியன்று ஓய்வூதிய தீர்ப்பாயத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் அறிவுறுத்தலின்படி நாடுமுழுவதும் ஓய்வூதிய தீர்ப்பாயம் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் புதன்கிழமை, மே 17, 2023 அன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் அலுவலகத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதிய தீர்ப்பாயம் மே 17, 2023 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த அமைச்சகத்தின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர் ஓய்வூதிய தீர்ப்பாயத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
தங்களது துறைகளை இ-மெயில் மூலமாகவும் முன்னதாகவே ஓய்வூதியதாரர்களும், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினரும் தெரிவிக்கலாம். இதற்கான இ-மெயில் முகவரி rahul.agrawal[at]gov[dot]in or dhirendra.choubey[at]nic[dot]in. மேலும் விவரங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் 011-23034746/23034755 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள்