விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் கடற்படை விருது வழங்கும் விழாவில் வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பு சேவைக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை கடற்படைத் தளபதி வழங்குகிறார்
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் 2023 மே 31, அன்று வீரதீர செயல்கள், தொழில்முறை சாதனைகள் மற்றும் சிறந்த சேவையை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களை கௌரவித்து இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பு சேவைக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் சார்பில் வழங்கவுள்ளார்.
கடற்படை விருது வழங்கும் விழா மாலை நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
விழாவில் இரண்டு நவோ சேனா பதக்கம் (வீரதீர செயல்), 13 நவோ சேனா பதக்கம் (சிறந்த கடமையுணர்வு), 16 விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் இரண்டு ஜீவன் ரக்ஷா பதக்கம் உட்பட 33 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சம்பிரதாய அணிவகுப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் விருது பெறுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கடற்படை விருது வழங்கும் விழா இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடற்படையின் 'யூடியூப் அலைவரிசையான Indian Navy என்ற யூடியூப் அலைவரிசையில், 2023 மே 31 மாலை 5 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கருத்துகள்