அகில இந்திய தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் யூனம் மலைக்கு செல்வதற்கான மலையேற்றப் பயணம் 2023-ஐ பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
அகில இந்திய தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் இமாசலப்பிரசேதம் மாநிலத்தில் உள்ள யூனம் மலைக்கு செல்வதற்கான மலையேற்றப் பயணம் 2023-ஐ பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் 2023, ஜூன் 26 அன்று புதுதில்லியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அத்துடன் இந்த மலையேற்றப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர், மலையேற்றக் குழுவின் முயற்சியைப் பாராட்டுவதாகக் கூறினார். இந்த சாகசப் பயணம் மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் என்று கூறினார். இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு தலைமைத்துவப் பண்பை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலையேற்றம், பாறை ஏறுதல், பனிச்சறுக்கு, பாலைவனப் பயணம் உள்ளிட்ட ஏராளமான வீரதீர, விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு தேசிய மாணவர் படைக்க அளிக்கப்படுவதாக திரு அஜய் பட் குறிப்பிட்டார். எந்த ஒரு அமைப்பும் இது போன்ற வீரதீர செயல்களில் ஈடுபடுத்துவது இல்லை என்று அவர் கூறினார். இதன் மூலம் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பலதரப்பட்ட மக்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இது நாட்டின் ஒற்றுமையை வலிமையை வலுப்படுத்து உதவுவதாக திரு அஜய் பட் குறிப்பிட்டார்.
கருத்துகள்