மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு: இந்தியத் தரநிர்ணய அமைவனம் ஜூன் 28 அன்று சென்னையில் நடத்துகிறது
இந்தியாவில் மின்சார வாகனத் தொழில்துறை 90 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக அண்மைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் மாநிலத்தில் பாதுகாப்பான, தரமான, நம்பகமான, பொருத்தமான, உள்கட்டமைப்பை உறுதி செய்வதில், தர நிர்ணய அமைவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. தர நிர்ணயம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உண்மையான களநிலவரத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்துரையாடுவது முக்கியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை அலுவலகம் மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில், 2023 ஜூன் 28 அன்று இந்தப் பயிலரங்கு நடைபெற உள்ளது.
கருத்துகள்