30 நாட்களில் கட்டிட வரைபட அனுமதி கட்டாயம் என்பது புதிய விதி
விண்ணப்பித்ததிலிருந்து, 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய விதிகள் உருவாக்கப்பட்டுநாடு முழுதும் கட்டுமானத் திட்ட அனுமதி வழங்குவதில், சீரான முறையை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில், புதிய வரைவு கட்டிட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறையுடன் இணைந்து, இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய கட்டுமானத் திட்ட விண்ணப்பத்தை பெற்றதிலிருந்து, ஏழு நாட்களில், அதன் அடிப்படைத் தகுதியை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரிடம் தேவையான கூடுதல் விபரங்களைப் பெற வேண்டும். அதன் மீதான தொழில்நுட்ப ஆய்வுகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையிருந்தால், அது குறித்து விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி குறித்த கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்படாமல், 30 நாட்கள் வரை, எவ்விதத் தகவலும் அனுப்பாமலிருந்தால், 45 வது நாளில், அந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட துறை ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும். அன்றே விண்ணப்பதாரர், கட்டுமானப் பணிகளை துவங்கலாம். மேலும் வரைவு விதிகளின் படி, 3,229 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனைகளில், ஒரே கட்டிடமாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு, பக்கவாட்டில் காலி இடம் விடத் தேவையில்லை; முன்புறம், பின்புறத்தில் மட்டும் காலியிடம் இருந்தால் போதும்.இதே போன்று, 500 சதுர அடி வரையான மனைகளில், 49 அடி உயரம் வரை குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டலாம். இதில் மனையில், 75 சதவீத இடத்தை, கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தலாம்.கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெறத் தேவையான 7 படி செயல்முறைகள் இதுவரை உள்ளது
ஒப்புதல்கள் எடுக்கப்படாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இருக்க வேண்டிய 7 அனுமதிகள் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறும் போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. உங்களிடம் முறையான ஒப்புதல்கள் இல்லை யென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை நிர்வாகம் எடுக்கலாம்:-
அதாவது மாஸ்டர் பிளான் பிரிவு 12 ன் கீழ், பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி , 2021 அன்று ரூபாய் . 5000 அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் கட்டிடத்தை இடிக்க ஒரு அதிகாரம் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பலாம் மற்றும் செலவுகளை சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.
சட்டத்தை மீறும் பட்சத்தில், ஒரு ஆணையம் கட்டிடம் கட்டும் பணியை நடத்தலாம்.
சீல் வைத்தல் : சட்டத்தின் 31A பிரிவின் கீழ், கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு சீல் வைக்க ஒரு அலுவலர் அனுமதி அளிக்கலாம்.கட்டிடம் கட்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம். மேலே கொடுக்கப்பட்ட எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கினால், அது அபராதம் அல்லது தண்டணை பிரிவு 12 ன் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 29ன் கீழ் அபராதம் விதிக்கப்படும், ஒப்புதல் பெறப்படாவிட்டால் ரூபாய். 5000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.என்ற நிலை இலஞ்சம் வாங்கும் நபர்களை ஊக்கப்படுத்துவது போல இருந்த நிலை இனி மாறும்
கருத்துகள்