தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராகிறார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு வெளியாகிறது
தமிழ் நாட்டின் மாநில தலைமைச் செயலராகப் பொறுப்பு வகிக்கும் வெ.இறையன்பு ஜூன் 30 ல் ஓய்வு பெறுவதால் 49 வது தலைமைச் செயலாளராக, நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகிறது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் இன்று ஒய்வு பெறுகிறார்.
அவர் ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமைச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில். ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையிலுள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகிய மூவரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில்.
நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராகப் பொறுப்பிலுள்ள சிவ்தாஸ் மீனாவை, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, அது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியான
நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதுவர பணியிலிருந்த இறையன்பு எழுத்திலும் பேச்சிலும் நாம் அறிந்தவரை வல்லவர் தான் ஆனால் நல்ல நிர்வாகம் செயலில் தந்தாரா என்பது தான் இங்கு எழு வினா?
கருத்துகள்