தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்
செய்து வைத்தார் உடன் நான்கு ஆணையர்களும் பதவியேற்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 ன் படி செயல்படும் மாநிலத் தகவல் ஆணையத்தில், ஒரு தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், இருவரை தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஆன ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் நான்கு பேரின் பதவிக்காலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்த நிலையில்
தலைமைத் தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் ஆர். என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
அதன்படி புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் ஆன ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் ஆன பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வு பெற்ற ஐசிஎல்எஸ் ஆன கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர். அதற்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட.
நிலையில், தலைமைத் தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, நேற்று மாலை நான்கு மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைத் தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நால்வருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நியமனம் மூலம் இனி இதுவரை தாக்கல் செய்து தேக்கமான தகவல் உரிமைச் சட்டத்தின் இரண்டாம் மேல் முறையீட்டு வழக்குகள் தீர்வாகும் நிலை தற்போது உறுவாகியுள்ளது.
கருத்துகள்