தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு சொகுசுக் கார் பரிசு கொடுத்த நடிகர் கமலஹாசன்.
தன் சொந்தப் பணத்தில் அநாதை மற்றும் உரிமை கோராத பிணங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வைத்த மணிமாறனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.
போட்டிக்கு விளம்பர மோகத்தில் தனியார் பேருந்தில் அரசியல் நடவடிக்கைக்காக வேலை போன ஒரு தனியார் பேருந்து பெண் ஓட்டுனருக்கு நடிகர் கமலஹாசன் கார் வாங்கிக் கொடுக்கிறார்.(அந்தப் பொண் அப்புடி எந்த ஒரு சாதனையோ ஒரு தியாகமும் செய்துள்ளதென இந்த கார் பரிசு அது அவருக்கே வெளிச்சம்).
இது தான் நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகர் கமலஹாசனுக்குமுள்ள வித்தியாசம். இந்தப் பெண் பிள்ளையின் முகம் சினிமாவிற்கானது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிற்கு அடுத்து வரிசையில் வசூலை அள்ளுவார்.
ஒரு வாய்ப்புத் தாருங்க பிக்பாஸ் எனவாகவும் இது இந்த நிகழ்வு அமையும்
முன்பே இந்த வடிவம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் பிரிவுத் தலைவருமான வானதி சீனிவாசன் முதலில் பேருந்தில் பயணம் செய்ய அந்தத் தகவல் பரவியதால் அதை் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி பயணம் செய்யும் போதே எழுதலாமெனறி இருந்த நிலையில். கலைஞானி நடிகர் கமலஹாசன் முந்தி விட்டார். அதை அரசியலாக்கி விட்டார் கார் பரிசு மூலம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு 24 ஆண்டு காலம் அரசுப் பேருந்தின் ஓட்டுநராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்த குமாரி (கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில்) க்குக்
கிடைக்காத புகழ் மற்றும் அதிர்ஷ்டமும் பாராட்டுக்களும் ஊடக விளம்பர வெளிச்சமும் கோயமுத்தூர் ஷர்மிளாவிற்கு கிடைக்கிறது காரணம் அரசியல்
ஆனால் முதல் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா இல்லை என்பதே உண்மை, அதைவிட ஒரு தகவல் சென்னை மெட்ரோ ரயில் சேவையை ஜுன் மாதம் 29 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டில் அப்போதய முதலமைச்சர் காலம் சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப் பட்டபோது
மெட்ரோ ரயிலை இயக்கியவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்மணியே
இன்று பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் லோகோ பைலட்டாக மெட்ரோ ரயிலில் பணிபுரிகிறார்கள் மெட்ரோ ரயிலை திறம்பட இயக்கியும் வருகிறார்கள் அவர்களுக்குக் கிடைக்காத
விளம்பரங்கள் ஊடக வெளிச்சம் மூலம் ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர்க்கு கிடைத்ததால் இன்று தமிழ்நாட்டு அரசியல் அதை வியந்து பார்க்கிறது ஊடக விளம்பரம் தேட உதவிகள் அவருக்கு வந்து குவிகின்றது.
கருத்துகள்