வட்டாட்சியர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கியது பணம். லோக் ஆயுக்தா அதிகாரிகளின் சோதனையில்
ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது கர்நாடக மாநிலத்தின் தமிழ் நாட்டை விட சிறப்பாகவே இயங்கி வரும் நிலையில், பல்வேறு நகரங்களிலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறையில் பணி செய்யும் பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் இலஞ்ச ஒழிப்புத்துறை இயங்குகிறது அவ்வப்போது திடீர் சோதனைகளையும் நடத்தி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வீடுகளில் சோதனையை நடத்தி வந்தது. மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாதெல் விருபாக்சப்பா என்பவரின் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் சிக்கியதால் அது கர்நாடக மாநிலத் தேர்தலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் லோக் ஆயுக்தா காவல்துறையினர், பெங்களூரு, தும்கூரு, சிக்கபல்லாபூர், கலபுரகி, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கே.ஆர்புரா வட்டாட்சியர் அஜித் ராய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாகச் சிக்கியது.
கருத்துகள்