ஆருத்ரா கோல்டு மோசடியில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வாங்கிய ரூபாய் .15 கோடி. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில்
நிறுவன முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் .2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூபாய்.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
விசாரணையில், அந்த நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தொடர்பாக இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூபாய். 6.35 கோடி ரொக்கம், ரூபாய். 1.13 கோடி மதிப்புள்ள நகைகள், 22 கார்கள், 103 அசையா சொத்துகள், ரூபாய். 96 கோடிக்கான வங்கிப் பணங்களும் முடக்கப்பட்டுள்ளது வெளிநாட்டுக்கு த் தப்பியோடிய ராஜசேகர், அவரது மனைவி உஷா இருவரையும் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நாராயணி, தீபக் கோவிந்த பிரசாத், ரூமேஸ்குமார் ஆகிய மூவருக்கும் லுக் அவுட் சர்குலர் அளித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வரும் வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளராக உள்ள ராமுக் களஞ்சியத்தின் மகணான பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதால் அதனடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி பொருளாதாரக் குற்றப்பிரிவினர் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நிலையில் நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதுடன் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கினர்.
இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு வர்த்தக மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது வெளியாகியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாகவே தலைமறைவாக உள்ளார். இதனிடையே 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறை முடிவெடுத்துள்ள நிலையில், 500 முகவர்கள் மூலம் ரூபாய் 800 கோடி வசூலித்தது தற்போது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்