தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
செய்து அரசு உத்தரவு. தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., டேவிட் தேவாசீர்வாதம் உள்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு. உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யான, டேவிட் தேவாசீர்வாதம், காவல் தலைமையக, ஏ.டி.ஜி.பி.,யாகவும்
ஆவடி, காவல்துறை ஆணையராக உள்ள அருண், சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு பிரிவு, ஏ.டி.ஜி.பி.,யாகவும்
சென்னை, சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யான சங்கர், ஆவடி, காவல்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐ.ஜி.,யான செந்தில் வேலனுக்கு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்