கருப்பு நிறமல்லாத உடைகளை அணிந்து வருமாறு சேலம் மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியதாக பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
இப்பொழுது மாவட்டக் காவல்துறை அதனை மறுத்திருக்கிறது.கறுப்பு உடை அணிந்து வரக் கூடாதென்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சேலம் மாவட்டக் காவல்துறையினர் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கறுப்பு நிறமல்லாத உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வந்த நிலையில் .தமிழ்நாட்டில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனாதன தர்மம் குறித்து தொடர்ந்து பேசி வருவது பெரும் சர்ச்சையாகவும் வெடித்த நிலையில் . ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவின் காரணமாக சேலத்தில் பலத்த காவக்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை அறிவுறுத்தலின்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் கறுப்பு நிற ஆடை அணியக்கூடாது என்ற அறிவிப்பை தற்போது வாபஸ் பெற்றது சேலம் பெரியார் பல்கலைக்கழகம் !
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது நாளை கறுப்பு உடை அணிந்து வரவேண்டாம் என்ற பல்கலைக்கழக பதிவாளரின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது
பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும்.
ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. என்ற சுற்றறிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது
பெரியாரின் கைத்தடி விரட்டிய சனாதனத்தை ஆளுநர அணிந்து வரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன். என பல அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளது பெரியார் எனும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் கறுப்பு உடை ஏன் அணிந்தார் அதில் ஒரு பின் வரலாறு உண்டு
பல்கலைக்கழக விழாவில் சட்டப்படியான காவல்துறையினருக்கு நிபந்தனைகளை விதிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது? என்பது இங்கு பார்க்க வேண்டியது மிக முக்கியம்
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தால் திமுக ஆட்சியை பிடித்த வரலாற்று ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதும் உள்ளது தானா இதுவே மக்கள் எழுவினா ?
கருத்துகள்