கால்நடைகளின் நலன் மற்றும் அது சார்ந்த துறைகளை மேம்படுத்தும் வகையிலான என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்
என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சுகம் இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்