பல குடும்பங்களில் மதுரையின் ஆட்சியா? இல்லை சிதம்பரத்தின் ஆட்சியா ? என்ற வழக்கு நடைமுறை இன்றும் உண்டு
அந்தத் தில்லை சிற்றம்பலத்தில் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை பற்றிய பதிவில் பலர் சிவனடியார்கள் மற்றும் அந்தணர்களும் நிறைய கவலைகளையும் சிறு கண்டனங்களையும் தீக்க்ஷிதர்களின் பேரில் வைக்கிறார்கள். தயவு செய்து உடனே அவர்களை கிரிப்டோ சைவர்கள் என்று வகைபடுத்த வேண்டாம். அவர்கள் ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் சைவம் வைணவம் சாக்கியம் கௌமாரம் , காணாபத்தியம் என்ற வேறுபாடு காட்டாத ஆழ்ந்த புலமை மிக்கவர்கள் தான். முன்னால் சட்ட அமைச்சரும் தற்போதய பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பெற்றுத்தந்த உச்சநீதிமன்ற உத்தரவு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் சாமானிய மக்களில் தமிழ்வழி வழிபடும் பக்தர்கள் நிலை ஜனநாயக நாட்டில் சமத்துவம் இல்லை என்பதே மன்னர் ஆட்சிகள் மாறிப்போனாலும் என்னைப் பொறுத்தவரை சிற்றம்பல தரிசனங்களின் போது எனக்கு தீக்க்ஷிதர்களின் பேரில் எந்தக் கண்டனங்களுமில்லை.
நாம் கண்ணில் கண்ட சிறுவயது காட்சி இன்றும் மனதில் பதிந்தது
பட்டமங்கலம் தெட்ஷ்ணாமூர்த்தி குரு பகவான் நடத்திய திருவிளையாடல் புரானத்தின் ஒரு படலம் அருளிய பூமி படித்துக் கொண்டிருந்த காலம் 1980 களில் கோவிலிலுள்ள குருக்கள், நல்ல வசதியுள்ளவர்கள் மற்றும் பிராமணர்கள் வரும் போது விழுந்து விழுந்து சேவை சாதிப்பார். என்னிடம் மட்டும் பழக்கப்பட்டதால் அவர் சிரித்துப் பேசியதும் உண்டு அந்தச் சிறு வயதில் எனக்கு அவ்வளவு ஆத்திரமாக வரும் அவரின் பேரில், ஏன் இந்த பேதம் காட்டப் படுகிறதென்று. ஆனால் ஞான மார்கத்தில் நுழைந்த பின் எனது இந்த ஆத்திரமெல்லாம் சிரிப்பாக மாறிக் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்.
என்ன செய்வது? இந்த கலிகாலத்தில் பணத்தின் தேவை அனைவருக்கும் உண்டு. அதில் அந்தண தில்லை தீக்க்ஷிதர்களும் விதிவிலக்கல்ல.
புரிந்து கொண்டு கடந்து செல்லுவோம். நமது நோக்கம் செயல் எல்லாம் ஆடல்வல்லானின் பரிபூரண அருளைப் பெறுவது மாத்திரம்தான். ஆனால் தீட்சிதர்களின் பொருள் பறிபோகும் கவலை அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை புனரமைத்த விஜயநகர நாயக்கர் பேரரசர்களின் வழித்தோன்றல்கள் என்ற வகையில், தீட்சிதர்களின் சொத்தாக பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படும் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்: விஜயநகர உஜ்ஜீவானா அறக்கட்டளை விண்ணப்பித்த நிலையில் நமது கருத்தாக இங்கு ஒரு பொதுநீதி தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் வந்தால் மட்டும் ஊழல் குறைந்துவிடுமா இல்லை அதிகரிக்கவே செய்யும் வாகனம் நுழைவுக் கட்டணம் ,வாகன நிறுத்தக் கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம் , குளிக்க,மற்றும் தீர்த்தக் கட்டணம் , செருப்பு விடுவது கட்டணம் ,தேங்காய் உடைக்கக் கட்டணம், காது குத்த கட்டணம் ,நெய் தீபம் ஏற்ற கட்டணம்,அர்ச்சனை செய்யக் கட்டணம் ,அபிஷேகம் செய்ய கட்டணம் காவடி எடுக்க கட்டணம், தங்கத் தேர் இழுக்க கட்டணம் ,இது போக கடை வாடகை ஒரு அடி நிலம் கூட அறநிலையத்துறை வாங்காமல் நில வாடகை, குத்தகை வருமானம் ,பிரசாத விற்பனை, பஞ்சாமிர்தம் விற்பனை, அன்னதான நன்கொடை, அபிஷேக நன்கொடை, கும்பாபிஷேகம் நன்கொடை கட்டளை பூஜை நன்கொடை, உண்டியல் வருமானம், இவ்வளவு வருவாய் இருந்தும்.
சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய் சிறப்பு கட்டணம். கடவுளைக் கும்பிட காசு கேட்பது நியாயமா?
கடவுள் முன்பு அனைவரும் சமம். இது ஒருபுறம் இருக்கட்டும் அறநிலையத்துறை வருவாய் பார்க்கும் துறையாக இருக்க ஆரம்ப காலம் அதன் பணியாளர்களான அந்தனர்கள் தான், சில தேவஸ்தான ஆலயங்களில் இவர்கள் வளர்த்துவந்த பிரச்சனைகள் காரணமாக தனியார் புனரமைத்த பல தேவஸ்தான ஆலயங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்று இன்று நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்து போனதைக் காணலாம் . அறநிலையத்துறை கோவிலுக்கு என கைமுதல் போடாது அந்தண தீட்சிதர்களும் ஒரு பைசா செலவிட மாட்டார்கள் அது முழுவதும் அரசர்கள் மற்றும் செக்வந்தர்கள் தந்த நிதி ஆகவே இப்போதய சண்டை அறநிலையத் துறைக்கும் தீட்சிதர்களுக்கும் தான் சிவ பக்தர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை தான் காணலாம் ஆகவே சமூக நீதி சமநீதி வேண்டும் என்ற நமது கொள்கை படி இங்கு பொதுநீதி சமயக்குறவோர் நால்வரில்
அருள்நிறை திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான் சொல்வதைப் போல்:
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!
மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே! ''
திருச்சிற்றம்பலம். இதுவே இங்கு பொதுநீதி.
கருத்துகள்