சாமானியராகப் பிறந்து வாழ்ந்து சாதித்து மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி
கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி சிகிச்சையில் இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜெர்மனியிலிருந்து கேரளம் திரும்பியவர், பேசும் திறனை 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருந்ததனால், உம்மன் சாண்டி அண்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகள் எதிலும் அதிகமாகப் பங்கேற்கவில்லை. இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை மேலும் மோசமடையவே சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சையிலிருந்த நிலையில் பலனின்றிக் காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும்
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கேரளா முதல்வர்பினராயி விஜயன், உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனின் இரங்கல் பதிவில்,”நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதே கட்டத்தில் தான் மாணவப் பருவத்தின் போது அரசியல் வாழ்வுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொதுவாழ்க்கையை முன்னெடுத்தோம். அவரிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினம். உம்மன் சாண்டி திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் பெரும்பாலும் முதல்வர்கள் எளிமையாக தான் இருப்பார்கள். அதிலும் உம்மன் சாண்டி மிகச் சாதாரண மனிதராகவே இருந்தார்.
51 வருடம் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உம்மன்சாண்டி இரண்டு முறை கேரளாவின் முதல்வராக இருந்துள்ளார்.
அப்போது கூட கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்காக தேவாலயம் ஒன்றின் படியில் தன்னந்தனி ஆளாக காத்துக் கிடந்த காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்து இப்படி ஒரு முதல்வரா ? என ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் பதவியை நிறைவு செய்த பின் அவர் எங்கு சென்றாலும் பேருந்தில் டிக்கெட் எடுத்துச் செல்வது தான் அவரது செயல் . சாதாரணமாக மற்ற பயணிகளோடு பயணிப்பார். அவர் முதல்வராக இருந்த போது தனது அறையில் என்ன நடக்கிறது என்பதை இணையதளம் மூலம் நேரலை செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமல்படுத்திய ஒரே முதல்வர் உம்மன்சாண்டி.
சில மாதத்திற்கு முன்பு உடல்நலம் குன்றிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்
ஆனால் உம்மன்சாண்டிlயோ இதை மறுத்து எனக்கு உடல் சோர்வாக தான் இருக்கிறது. நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்றும் முதல்வருக்கு அளித்த கடிதத்தை திரும்ப பெற்று விடு என்று அவரது அண்ணனுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்துகள்