தற்சார்பு இந்தியா நிதி தொகுப்பின் ஒரு பகுதியாக,
எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (முதலீட்டு நிதியங்களில் முக்கிய பங்கினை வைத்துக்கொள்வதன்) மூலம் ரூ.50,000 கோடி பங்கு உட்செலுத்துதல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு இணங்க, வளர்ந்து பெரிய அலகுகளாக மாறும் திறனையும் சாத்தியக்கூறுகளையும் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ரூ. 50,000 கோடியை சமபங்கு நிதியாக வழங்குவதற்காக தற்சார்பு இந்தியா (எஸ்.ஆர்.ஐ) நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 50,000 கோடி மதிப்பிலான இந்த நிதியத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து ரூ.10,000 கோடியும், தனியார் பங்கு / தொழில் மூலதன நிதிகள் மூலம் ரூ.40,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, எம்.எஸ்.எம்.இ.க்கான திருந்திய நிதியின் கீழ் மொத்த பங்கு உட்செலுத்துதல் ரூ.4,885 கோடியை எட்டியது, இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.529.40 கோடியும் அடங்கும்.
எம்.எஸ்.எம்.இ துறைக்காக மத்திய அரசு பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, அவற்றுள் பின்வருவன அடங்கும்:
எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான சாம்பியன்ஸ் 2.0 போர்ட்டல் 27.06.2023 அன்று தொடங்கப்பட்டது;
எம்.எஸ்.எம்.இ சாம்பியன்ஸ் திட்டம், பின்வருவனவற்றை உள்ளடக்கியது
எம்.எஸ்.எம்.இ- நீடித்த தன்மைகொண்டது
எம்.எஸ்.எம்.இ- போட்டி (லீன்) மற்றும்
எம்.எஸ்.எம்.இ- புதுமை கண்டுபிடிப்பு (புதியது, ஐ.பி.ஆர், வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ) இது எம்.எஸ்.எம்.இ.க்கு நிதி உதவி வழங்குகிறது;
2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் தொகு நிதியில் ரூ.9,000 கோடி உட்செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
"எம்.எஸ்.எம்.இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுபடுத்துதல்", இது மத்தியிலும் மாநிலங்களிலும் எம்.எஸ்.எம்.இ திட்டத்தின் நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் எம்.எஸ்.எம்.இ துறையின் கடன் மற்றும் சந்தைக்கான அணுகலை அதிகரிப்பது, தொழில்நுட்ப மேம்பாடு மூலம் உறுதியான திறன்களை அதிகரிப்பது, தாமதமான கொடுப்பனவுகளின் நிகழ்வுகளைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது;
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 43 பி ("சட்டம்") நிதிச் சட்டம் 2023 போன்றவற்றில் திருத்தம்.
இத்தகவலை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்