குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் பிரதமருடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.
குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக அறிவிப்பு
இந்தியாவுக்காகான டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாகத் தகவல்.
கூட்டத்தில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, ஆப்பிள் தலைமை நிர்வாகி குக் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றதில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் அமெரிக்காவின் பிரதிநிதிகளும் பங்கேற்ற
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். அதில் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் நிறுவனம் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் எனத் தெரிவித்தார் அவர் பேசுகையில், " அமெரிக்காவில் இந்தியப்பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் நிறுவனம் முதலீடு செய்வதாக நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாகத் தான் இப்போது பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
கருத்துகள்