பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் "தெய்வீக ஒளி இல்லத்திற்கு" குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
தமாண்டோ, தசாபாத்தியாவில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் "தெய்வீக ஒளி இல்லத்திற்கு" குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 27, 2023) தமாண்டோவின் தசாபாத்தியாவில் உள்ள பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் "தெய்வீக ஒளி மாளிகைக்கு" அடிக்கல் நாட்டினார். கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான "நேர்மறையான மாற்றத்தின் ஆண்டு" என்ற கருப்பொருளை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசு தலைவர் , பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் என்பது வெறுமனே ஒரு அமைப்பு மட்டுமல்ல, பெண்களால் நடத்தப்படும் ஒரு சமூக மற்றும் ஆன்மீக பிரச்சாரமாகும் என்றுகூறினார்.
பௌதிக மற்றும் ஆன்மீக வளர்ச்சி இரண்டும் மனிதகுலத்திற்கு அவசியம் என்று குடியரசு தலைவர் கூறினார். தொழில்நுட்பம் மாற்றத்தின் உந்துசக்தி என்றும், அந்த மாற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்லாமல் வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் அவர் கூறினார். பொருள் முதல்வாத மாற்றங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் ஆன்மீக பாதையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் மன அமைதியை அடைய முடியும் என்று அவர் கூறினார். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா தியானம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறை மூலம் ஆன்மீகத்திற்கு வழிவகுக்கிறது என்பதில் மகிழுவதாக அவர் கூறினார்.
அவ்வப்போது சில எதிர்மறை எண்ணங்கள் நம் மனதை தொந்தரவு செய்த போதிலும், சுயபரிசோதனை இல்லாததால், நாம் எதிர்மறை சிந்தனைக்கு இரையாகத் தொடங்குகிறோம் என்று அவர் மேலும் கூறினார். பொறாமை மற்றும் வெறுப்பு உணர்வுகள் நமக்குள் அதிகரிக்கத் தொடங்குகின்றன என்று அவர் கூறினார். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு நேர்மறையை நோக்கி நகர்வதே இன்று நம் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும் என்று அவர் மேலும் கூறினார். மனிதகுலத்தை விழிப்படையச் செய்வதற்கும், நேர்மறையான திசையில் மக்கள் முன்னேற உதவுவதற்கும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
கருத்துகள்