புதுக்கோட்டை பிரபல ஓவியர் மாருதி காலமானார்
அவர் தூரிகை படைத்த பெண்கள் தான் அந்தக் காலங்களில் வந்த இதழ்களில் எத்தனை அழகு. அந்த அட்டை பட ஓவியங்களுக்காக பலரும் வாங்கிய இதழ்கள் எத்தனையோ. முகநூலில் தொடர்ந்து ஓவியங்களைப் பதிவிட்டவர். வாழ் நாளில் ஒரு முறையேனும் சந்திக்கவில்லை என்றாலும்
அஞ்சலி ஐயா .இரங்கநாதன் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப வெ. இரங்கநாதன் என்ற மாருதி (28.8 1938 – 27.7. 2023), தமிழ்நாட்டின் ஓவியரும் ஆடை வடிவமைப்பாளருமாவார். கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவரை பாராட்டி கலைமாமணி விருது வழங்கியுள்ளது. மராட்டிய வழி வந்த தமிழர்
வெங்கோப ராவ், பத்மாவதி பாய் மகனாவார் வெங்கோப ராவ் ஆசிரியராதலால் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் சிறுவயதில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட
இரங்கநாதன் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.ல்.சி வரைப் படிதது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்த பின் ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்தி விட்டு ஓவியரானார் தஞ்சாவூர் அரசு ஊழியர் விமலாவைத் திருமணம் செய்தவருக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள்
கே. மாதவன் என்ற ஓவியரை மானசீக குருவாக எண்ணி கற்றார். திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959 மார்ச் 11 ஆம் தேதியில் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் ஆர். நடராஜன் என்ற ஓவியரிடம் இரங்கநாதன் திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படுகிற பிரட்சனையை தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் போது 'மாருதி' என கையொப்பமிட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென நேர்காணலில் கூறியுள்ளார்.
மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1959 அன்று குமுதம் வார இதழில் வெளியானது. அய்யோ பாவம் என்ற தலைப்பிலான சிறுகதைக்காக ஓவியம் வரைந்தவருக்கு தமிழ்நாடு அப்போதய முதல்வர் எம். ஜி. ஆர் ஓவியப் பணிகளையும், வீடும் தந்தார். அதே போல மற்றொரு முன்னாள் முதல்வரான கலைஞர் மு. கருணாநிதி, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவரது கடற்போர் உள்ளிட்ட சில படைப்புகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பும் தந்துள்ளார்.
மகாராட்டிர மாநிலம் புனே நகரில் அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நெஞ்சக நோயால் காலமானார். நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் இணைந்து ஓவியம் கற்றவர்கள்.ஓவியர்களுக்குள் போட்டிகள் இருக்கும். வெளி நபர்களிடம் மகுடம் தரித்தவராக நடந்துக் கொள்ளமாட்டார்கள். அந்த வகையில் ஓவியர் மாருதியும் அப்படிதான்... எளிமையாக பழகக்கூடியவர். அவரின் இறப்பு கலை பத்திரிக்கை உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு
கருத்துகள்