அவமதிப்பு வழக்கிலிருந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டதால் டெல்லி உயர் நீதிமன்றம் குருமூர்த்தியை விடுவித்தது
துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி அவமதிப்பு வழக்கிலிருந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டதால் டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு.
2018-ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய, தற்போது ஒடிசா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிராக குருமூர்த்தி ட்வீட் செய்தாரென, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், கவுரங் காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இவ் வழக்கில் ஏற்கெனவே குருமூர்த்தி தாமாக முன்வந்து, நீதித் துறையின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், எனவே இந்த விஷயத்தை அமைதிப்படுத்துவது முக்கியமானதெனவும் கூறி, தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பிரமானப் பத்திரமாக தாக்கல் செய்த நிலையில்
வழக்கிலிருந்து விடுவித்து, டெல்லி உயர் நீதிமன்றம்.
நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு 2018-ஆம் ஆண்டு முதல் நிலுவையிலிருக்கிறது. இதற்கு மேலும் இதை நீடிக்க விடமுடியாது. இந்த வழக்கால் சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயர் தான் மீண்டும், மீண்டும் அடிபடுகிறது. சில நேரங்களில் நோயைக் குணப்படுத்துவது என்பது, நோயை விடக் கொடுமையானது’’ என்று கூறி, இந்த வழக்கிலிருந்து குருமூர்த்தியை விடுவித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள்