விழுப்புரம் புதுச்சேரி சாலை வள்ளலார் அருள் மாளிகை நீதிமன்ற உத்தரவில் இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையிடையிலுள்ள வள்ளலார் அருள் மாளிகை நீதிமன்ற உத்தரவில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமையன்று கையகப்படுத்தினர்.
விழுப்புரம் ரயில் நிலையமருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அறக்கட்டளை சார்பில் வள்ளலார் அருள் மாளிகை இயங்கியதை அண்ணாமலை உள்ளிட்டோர் நிர்வகித்தனர்.
இங்கு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீனிவாசன் 2016-ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதை எதிர்த்து அண்ணாமலை மேல் முறையீடு செய்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் மூலம் தக்காரை நியமித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் 3 - ஆம் தேதி வள்ளலார் அருள் மாளிகையை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்குச் சென்ற நிலையில் மாளிகை பூட்டப்பட்டிருந்ததை உடைத்து, உள்ளே நுழைந்து கையகப்படுத்தினார். அதற்கான தக்காராக பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பணியில் உள்ள செயல் அலுவலர் மதனா என்பவர் நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்