பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்புகளுக்கு பிரதமர் பாராட்டு
பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
“பட்டய கணக்காளர்கள் தினத்தில், நமது நாட்டின் முக்கிய நிதி கட்டமைப்பாளர்களான ஒரு தொழில்முறை சமூகத்தை நாம் கௌரவிக்கிறோம். அவர்களின் ஆராயும் மதிநுட்பமும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியமான அம்சங்களாகும். அவர்களின் நிபுணத்துவம் வளமான, தன்னிறைவு மிக்க இந்தியாவை உருவாக்க உதவுகிறது’’.மேலும்மருத்துவர்கள் தினத்தையொட்டி ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ;
DoctorsDay அன்று, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கடியான காலங்களில் கூட, மருத்துவர்கள் தன்னலமின்றி, மிகுந்த தைரியத்துடனும், மன உறுதியுடனும் கடமையாற்றி வருகின்றனர். குணப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு அபாரமானது; அது நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கிறது’’.
கருத்துகள்