இறக்குமதியை குறைக்க நிலக்கரி சலவைத் திறனை அதிகரிக்க வேண்டும்: நிலக்கரி துறை செயலாளர் அறிவுறுத்தல்த்த
நிலக்கரி இறக்குமதியை குறைக்க நிலக்கரி சலவைத் திறனை அதிகரிக்க வேண்டும்: நிலக்கரி துறை செயலாளர் அம்ரித் லால் மீனா
"நிலக்கரி சலவை - வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் தில்லியில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கு அறிவுப் பரிமாற்றத்திற்கும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், நிலக்கரித் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியது.
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா தமது சிறப்புரையில், கோக்கிங் மற்றும் கோக்கிங் அல்லாத நிலக்கரிக்கான சலவை ஆலைகளின் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பது கணிசமாகக் குறையும் எனவும் உள்நாட்டு நிலக்கரியை ஊக்குவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிலக்கரி உற்பத்தியை திறம்பட அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து புதிய சுரங்கங்களை திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். போக்குவரத்து தடைகளை சமாளிக்க பல ரயில்வே திட்டங்கள் நடந்து வருவாகவும் நிலக்கரி தொழில்துறையின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்தக் கருத்தரங்கில், 20 நிறுவனங்களைச் சேர்ந்த, 130-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புப் பணி அதிகாரி (ஓ.எஸ்.டி) டாக்டர் பியூஷ் குமார் பேசுகையில், கருத்தரங்கை வெற்றியடையச் செய்ததற்காக பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கருத்தரங்கின் அனைத்து தகவல்களையும் www.wmc-inc.org என்ற இணையதளத்தில் காணலாம் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்