திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தில் அஸ்வின் மனைவி சத்யா (வயது 35). என்பவருக்கு மாராடியில் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கப்பட்டது.
சத்யாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு 22.ஆகஸ்ட்.2023 ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இலவச வீட்டு மனைப் பட்டாவின் பிரதியைப் பெற முடியாததால் சத்யா மறுநாள் 23 ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சுமதியிடம் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைப் பட்டாவின் பிரதியைத் தருமாறு கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி (வயது 34) தனக்கு ரூபாய் பத்தாயிரம் பணம் இலஞ்சமாகத் தந்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனைப் பட்டா பிரதி வழங்க முடியும் எனக் கூறிய தகவலை சத்யா, அவரது கணவர் அஸ்வினிடம் சத்யா தெரியப்படுத்தியபோது அவர், யாருக்கும் பணம் தராமல் பட்டா பெறுமாறு கூறியதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.ஆம் தேதியன்று மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை அலுவலகத்தில் சந்தித்து தனது வீட்டுமனைப் பட்டாவின் பிரதியைக் கொடுக்குமாறு மீண்டும் கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி, தான் ஏற்கனவே கேட்டிருந்த பத்தாயிரம் ரூபாயில் 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 7000 ரூபாயாவது கொடுத்தால் தான் வீட்டுமனை பட்டாவின் பிரதி வழங்க முடியும் எனக் கூறவே, இலஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா,
திருச்சிராப்பள்ளியிலுள்ள ஊழல் தடுப்பு் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் அளித்த புகாரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்தலைமையிலான ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையில் மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை, சந்தித்த சத்யா, அவரிடம் பினாப்தலின் தடவிய 7000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகத் தந்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமதியை பணம் இலஞ்சமாக வாங்கிய கையுடன் பிடித்து, பணம் பறிமுதல் செய்து தீவிர விசாரணைக்கு பின் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறைக்கு கொண்டு சென்றனர்.
கருத்துகள்