செய்தியாளர்:- ஆர்.சரத்பவார் இன்றையதினம் அதிகாலை நேரம் 5.30 மணியளவில் ரயில் பெட்டியில் தீ விபத்து
மதுரை இரயில் நிலையம் அருகில் , கொல்லம் - புனலூர் விரைவு ரயிலிலிருந்து கழட்டி ரயில்வே டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் மூன்று பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து பத்துப் பேர் பலி, பலர் படுகாயம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி லட்சுமணபுரி எனும் இலக்னோவிலிருந்து IRCTC ஆன்மீகச் சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாக திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு இன்று அதிகாலை 5.15 மணியளவில் வந்தடைந்த இரயில் பெட்டியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட வட மாநில பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்திருந்தனர்.
அதில் ஒரு பயணி, பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்துத் தேனீர் தயாரிக்க, அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்ட வெளியிலிருந்த பயணிகள் சப்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் பயணிகள் கீழே இறங்க முயன்ற நிலையில் அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதில் அந்தப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த வயதானவர்கள் கீழே இறங்க முடியாத அல்லது இயலாத நிலையில் பலியாகினர்.
இதுவரை பத்து சடலங்களை மீட்ட மதுரை மாநகரத் தீயணைப்புத் துறையினரும், பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் பத்து சடலங்களை மீட்டுள்ளனர்.
ஐவர் ஆண்கள், மூவர் பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் இரு நபர் என்ற நிலை
சம்பவ இடத்தில் ரயில்வே காவல்துறையின் & உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் & மாவட்ட வருவாய்த் துறையினர், காவல்துறை ஆணையர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசினர் ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு மாநில அமைச்சர் பி. மூர்த்தி வந்து விபரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின் அமைச்சர் பி டி ஆர் பழனி வேல் தியாகராஜன் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் 'அழாதீங்க அவங்களுக்கு ஏதும் ஆகாது .என கண்ணீர் விட்டழுத பயணிகளை ஆரத்தழுவி அமைதிப்படுத்தினார்' இதில் பொதுவாக வட இந்திய மக்கள் பாவம் தான் ; போதிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ,பொருளாதாரமேம்பாடோ பெறாத மக்கள்.ஆகவே தான் தொடர்ந்து சில கட்சிகள் மட்டுமே அங்கு வெற்றி கொள்ள முடிகிறது.
MADURAI JUNCTION FIRE INCIDENT : HELP LINE NUMBERS The following two help line numbers are provided at the site to share the information related to the fire incident and causalities 9360552608, 8015681915. மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து!
அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடி நடவடிக்கை!
விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும்
மதுரை ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்புதுறை ஆணையர் செளத்ரி விசாரணை மேற்கொள்வார் - எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவு
மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஐஆர்சிடிசி டூரிஸ்ட் கோச் இன்று காலை 5.15 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது குறித்து, பெங்களூரு தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துவார்.
நாளை காலை 9.30 மணியளவில், மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் விசாரணை தொடங்கும். சம்பவம் மற்றும் விஷயம் தொடர்பாக அறிந்தவர்கள் ஆதாரங்களை வழங்க விரும்பினால் டிஆர்எம் அரங்கில் அவற்றை வழங்கலாம். எழுத்துபூர்வமாக தெரிவிக்க விரும்புவர்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம், ரயில் சன்ரக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு எழுதலாம் என தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதில் பொது நீதி யாதெனில் இரயில் பெட்டிக்குள் பரவும்படி தீ பம்ப் ஸ்ட்வ் அடுப்பைப் பயன் படுத்தி சமையல் செய்து பத்துப் பேர் மாண்டு போயிருக்கின்றனர். பலருக்கும் காயம். கொள்ளையர்கள் வரக் கூடுமென்று இரயில் பெட்டியை பூட்டி வேறு வைத்திருக்கின்றனர்.இப்படி ஒரு சூழல் தமிழர்கள் வாழ்வில் எப்போதும் நடக்காது.
தென்னர் தம் வாழ்வும், கலாச்சாரமும் பன்பாடும் வேறு வேறு என்பதே
கருத்துகள்